Published:Updated:

`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!'- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ இறங்கவிருப்பதாகத் தெரிகிறது.

`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!'- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா?

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ இறங்கவிருப்பதாகத் தெரிகிறது.

Published:Updated:
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்பு வரை சிறப்பாக விளையாடிய இந்தியா, இங்கிலாந்துடனான அரையிறுதியில் தோல்வியுற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணியின் இந்தத் தோல்விக்குப் பின் பி.சி.சி.ஐ நிறைய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
பிசிசிஐ
பிசிசிஐ

டி20 உலகக்கோப்பைப் போட்டியைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்திய அணியைத் தேர்வு செய்யும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழுவை பி.சி.சி.ஐ நேற்று இரவு அதிரடியாகக் கலைத்தது.

தற்போது புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினராக வர விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏழு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்ச பத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது 30 முதல் தரப் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

இதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ இறங்கவிருப்பதாகத் தெரிகிறது. இதனால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு என்று ஒரு கேப்டனும், டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டனும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே இங்கிலாந்து உள்ளிட்ட சில சர்வதேச அணிகள் இந்த யுக்தியைப் பயன்படுத்தி வருகின்றன. தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை என இரண்டுமே இங்கிலாந்திடமே உள்ளது. எனவே இதே திட்டம் இந்தியாவுக்கும் பலனளிக்குமா?