Published:Updated:

"கிரிக்கெட்டில் ஆண், பெண் இருபாலர்களுக்கும் இனி ஒரே சம்பளம்!"- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி

ஜெய் ஷா

பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா இது தொடர்பான அறிவிப்பை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"கிரிக்கெட்டில் ஆண், பெண் இருபாலர்களுக்கும் இனி ஒரே சம்பளம்!"- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி

பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா இது தொடர்பான அறிவிப்பை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published:Updated:
ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட்டர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் வேறுபாடு இருந்து வந்தது. ஆண்களுக்கு அதிக ஊதியம், பெண்களுக்குக் குறைவான ஊதியம் என்றிருந்த நிலையில் இந்த பாலின பாகுபாடுகளைக் களையும் விதமாக இருவருக்கும் சம ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது பற்றிக் கூறிய அவர், "இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பாலினப் பாகுபாட்டைக் களையும் விதமாக பிசிசிஐ எடுத்து வைத்துள்ள முதல் அடி இது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வீராங்கனைகள் அனைவருக்கும் சம ஊதிய கொள்கையைச் செயல்படுத்துகிறோம். பாலின சமத்துவத்தை நோக்கிய இந்திய கிரிக்கெட்டின் நகர்வு இது. இனி ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு ரூ.6 லட்சம் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இது மகளிர் கிரிக்கெட்டிற்கான எங்களது அர்ப்பணிப்பு. இதற்கு ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.