Published:Updated:

தோனியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வர நினைக்கிறதா பி.சி.சி.ஐ? பின்னணி என்ன?

தோனி

இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் தோனியை நியமிப்பதற்கு பி.சி.சி.ஐ திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published:Updated:

தோனியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வர நினைக்கிறதா பி.சி.சி.ஐ? பின்னணி என்ன?

இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் தோனியை நியமிப்பதற்கு பி.சி.சி.ஐ திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோனி

T20 உலகக்கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான  போட்டியில் இந்தியா தோல்வியுற்றது குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் தோனியை நியமிப்பதற்கு பி.சி.சி.ஐ திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை.

இதை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்றுத் தந்த தோனியை இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் நியமித்து எதிர்கால வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

தோனி
தோனி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்துவருவதால், அவருக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளதாக எண்ணி பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்துள்ளதாகக்  கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது இந்திய அணியின் ஆலோசகராகச் செயல்பட்ட தோனியை இப்போது இயக்குநராகச் சேர்ப்பது குறித்து பி.சி.சி.ஐ-யில் பேசப்பட்டுவருகிறது. 2023-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருடன் தோனி ஓய்வு பெறவிருப்பதாகத் தெரிவிப்பதால் அதற்குப் பின் அவரின் அனுபவத்தையும் திட்டம் வகுக்கும் புத்திசாலித்தனத்தையும் சரியான முறையில் பயன்படுத்த பி.சி.சி.ஐ ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.