Published:Updated:

`லிமிடெட் ஓவருக்கு ரோஹித்... டெஸ்டுக்கு கோலி?' - பி.சி.சி.ஐ கையிலெடுக்கும் அஸ்திரம்

மலையரசு

ஒரு புதிய பார்வை தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ரோஹித் அதற்குத் தகுதியான நபராக இருப்பார்.

கோலி
கோலி ( AP )

உலகக்கோப்பையில் அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணங்கள் சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே, தோல்விக்கிடையே இந்தி பத்திரிகையான டைனிக் ஜக்ரான் இந்திய அணியில் பிளவு இருப்பதாக ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. கோலிக்கு ஆதரவாக சிலரும், ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ரோஹித் - கோலி
ரோஹித் - கோலி
AP

``இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொல்லைக் கேட்டு விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே கோலி அணியில் இடம்கொடுக்கின்றனர். தனக்கு சரிப்பட்டு வராதவர்களைக் கழற்றி விடுகின்றனர். உலகக்கோப்பை அணித்தேர்வின்போதுகூட துணைக் கேப்டன் என்ற முறையில் ரோஹித் ஷர்மாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், கோலி, ரவிசாஸ்திரி இருவரும் இணக்கமாக செயல்படுகின்றனர். தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.பிரசாத் இவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்.

அவர்களுக்குத் தேவையான வீரர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுகின்றனர். சாஹல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. பும்ரா, ரோஹித் ஷர்மா இருவரும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்கள், அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் தேர்வு இப்படியாகத்தான் நடக்கிறது. கோலி, ரவி சாஸ்திரியின் தன்னிச்சையான முடிவுகளே உலகக்கோப்பை தோல்விக்கான காரணம்" என அதில் கூறப்பட்டது. இந்தச் செய்தி இந்திய கிரிக்கெட் அணியில் பூகம்பமாக வெடித்துள்ளது. தற்போது இந்தப் பிரச்னை குறித்து ஆலோசிக்க பி.சி.சி.ஐ முன்வந்துள்ளது.

கோலி
கோலி
AP

ஐ.ஏ.என்.எஸ் தளத்துக்குப் பேட்டியளித்துள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ``ரோஹித்துக்கும், கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு என வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. இந்த மாதிரியான தவறான தகவல்களால் அணிக்கு பாதிப்பு ஏற்படும். இருந்தாலும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த பி.சி.சி.ஐ தயாராக உள்ளது. ரோஹித் ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை ஏற்க இதுவே சரியான தருணம். கோலிக்கு தற்போது மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. இருப்பினும் அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய கட்டாயமும் ஏற்கெனவே உள்ள யோசனைகளுக்கு புதுவடிவம் கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

`ஒருதலைபட்சமான முடிவுகள்; இந்திய அணிக்குள் பிளவு?' - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இதனால் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு ரோஹித்தும், டெஸ்ட் போட்டிகளுக்கு கோலியையும் கேப்டனாக நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கலாம். சில விஷயங்கள்ல ஒரு புதிய பார்வை தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ரோஹித் அதற்குத் தகுதியான நபராக இருப்பார். இதுதொடர்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் ஆகியோர் நிர்வாகக் குழுவை விரைவாக சந்திப்பர். மறுஆய்வு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அப்போது இந்த பிரச்னையில் முடிவு எடுக்கப்படலாம்.

ரோஹித்
ரோஹித்
AP

அப்போது இந்த வதந்திகளுக்கு முடிவு ஏற்படும். ஆனால், இதுபோன்ற பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் தற்போதைக்கு இந்திய அணி அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. எவ்வளவு சிறந்த அணியானாலும் ஒரு தொடர் முடிவுக்கு வந்த உடன் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். அது வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி. அதைதான் இந்திய அணி இப்போது செய்ய உள்ளது" எனக் கூறியுள்ளார்.