Published:Updated:

Ranji Trophy: ‘ 9 வீரர்கள் இருந்தால் போதும்’ புதிய விதிமுறையோடு நடைபெறும் நடப்பாண்டு ரஞ்சி தொடர்.

Ranji Trophy

களத்தில் வீரர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் போட்டியானது வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்படும் என்றும் அவ்வீரர் காயத்தில் இருந்து மீள அதற்கு மேல் நேரம் தேவைப்படுமாயின் அவர் களத்தில் இருந்து அப்போதைக்கு வெளியேறிவிட வேண்டும் என்றும் புதிய விதி கூறுகிறது

Ranji Trophy: ‘ 9 வீரர்கள் இருந்தால் போதும்’ புதிய விதிமுறையோடு நடைபெறும் நடப்பாண்டு ரஞ்சி தொடர்.

களத்தில் வீரர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் போட்டியானது வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்படும் என்றும் அவ்வீரர் காயத்தில் இருந்து மீள அதற்கு மேல் நேரம் தேவைப்படுமாயின் அவர் களத்தில் இருந்து அப்போதைக்கு வெளியேறிவிட வேண்டும் என்றும் புதிய விதி கூறுகிறது

Published:Updated:
Ranji Trophy

2022-ம் ஆண்டிற்கான ரஞ்சி தொடர் நாளைய தொடங்கவிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஞ்சி தொடரை நடத்தவில்லை பிசிசிஐ. இந்திய கிரிக்கெட்டின் ஆன்மாவாகக் கருதப்படும் இத்தொடரை இந்தாண்டிலாவது பிசிசிஐ நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ரஞ்சி தொடரை இரண்டு இரண்டு கட்டங்களாக நடத்த இருப்பதாக அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்த நிலையில் நடப்பாண்டு ரஞ்சி தொடரில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருப்பதற்கும் அப்படி தொற்று ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றியும் சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

Ranji Trophy
Ranji Trophy

அதாவது ஒரு போட்டி தொடங்கிய பின்பு அதில் விளையாடி வரும் ஏதேனும் ஒரு அணியின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், அந்த அணியில் குறைந்தபட்சம் 9 வீரர்கள் இருந்தால் அப்போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று புதிய விதிமுறை கூறுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதே போட்டி தொடங்கிய பிறகு கொரோனா தொற்றினால் அணியில் ஒன்பது வீரர்களுக்கும் குறைவானவர்களே இருந்தால் அந்த ஆட்டம் நடைபெறுவது லீக் ஸ்டேஜாக இருந்தால் புள்ளி பட்டியலின் அடிப்படையிலும் அது நாக்-அவுட் போட்டியாக இருந்தால் ரன்-ரேட் மூலமோ Coin Spin மூலமோ முடிவு தீர்மானிக்கப்படும். மேலும் முதல் இன்னிங்ஸ் முடிவே தீர்மானிக்கப்படாமல் போட்டியை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ranji Trophy
Ranji Trophy

இதுமட்டுமல்லாமல் பௌலர்கள் தாங்கள் பந்துவீச தொடங்கும் முன்பாக பந்துவீசும் கையில் சுற்றப்பட்டிருக்கும் அனைத்து விதமான டேப்புகளையும் அகற்றி விட வேண்டும் என புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த டேப்பானது பந்து வீசும் கைக்கு பின்புறமாக இருந்தால் அது உடலின் நிறத்துடனும் பந்தை எதிர்கொள்ளும் பேட்டரை திசை திருப்பாத வகையிலும் இருப்பது அவசியம்.

மேலும் களத்தில் வீரர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் போட்டியானது வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்படும் என்றும் அவ்வீரர் காயத்தில் இருந்து மீள அதற்கு மேல் நேரம் தேவைப்படுமாயின் அவர் களத்தில் இருந்து அப்போதைக்கு வெளியேறிவிட வேண்டும் என்றும் புதிய விதி கூறுகிறது.

அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுவதற்கான விதிமுறைகள் பின்வருமாறு:

வெற்றிபெறும் அணிக்கு 6 புள்ளிகள். இதே இன்னிங்ஸ் வெற்றி , அல்லது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலோ வெற்றி என்றால் கூடுதலாக 1 புள்ளி வழங்கப்படும். போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருக்கும் அணிக்கு 3 புள்ளியும் மற்றொரு அணிக்கு 1 புள்ளியும் வழங்கப்படும். மேலும் முதல் இன்னிங்ஸ் டை ஆகி போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளியும், போட்டியே டையில் முடிந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிககள் வழங்கப்படும்.

Ranji Trophy
Ranji Trophy

இது தவிர கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பந்தை ஷைன் செய்ய பௌலர்கள் எச்சிலை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு முறை இதற்கான எச்சரிக்கை பந்துவீசும் அணியின் கேப்டனிடம் தெரிவிக்கப்படும். அதை மீறி இச்செயல் தொடர்ந்தால் பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என புதிய விதியில் கூறப்பட்டுள்ளது.