Published:Updated:

''கோலி, ரோஹித் ஷர்மாவை யாரும் சந்திக்கக் கூடாது!'' - ஐபிஎல் அணிகளுக்குத் தடை போட்ட பிசிசிஐ! #IPL2021

ரோஹித் ஷர்மா, விராட் கோலி

பெங்களூரு அணி நிர்வாகம் விராட் கோலியையும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் ஷர்மாவையும் ஹோட்டலில் சந்தித்துப் பேச அனுமதி கேட்டது. ஆனால், அனுமதியளிக்க முடியாது என மறுத்திருக்கிறது பிசிசிஐ.

2021 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நாளை மறுநாள் (பிப்ரவரி 18) மதியம் 3 மணிக்கு சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இதற்காக 8 அணிகளின் உரிமையாளர்களும், தங்கள் குழுவினரோடு சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒருநாளுக்கு முன்பாகவே முடிந்ததால் ஏலத்துக்கு முன்பு தங்கள் கேப்டனைகளை சந்திக்க ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்தன.

பெங்களூரு அணி நிர்வாகம் தங்கள் கேப்டன் விராட் கோலியையும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் ஷர்மாவையும் ஹோட்டலில் சந்தித்துப் பேச அனுமதி கேட்டது. ஆனால், அனுமதியளிக்க முடியாது என மறுத்திருக்கிறது பிசிசிஐ.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
mumbaiindians.com

''இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக பயோபபுளில் இருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பயோபபுளில் இல்லாதவர்கள் வீரர்களை நேரில் சந்திக்க அனுமதிக்கமுடியாது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இதற்கு ஒப்புதல் அளிக்காது. ஆனால், ஐபிஎல் அணிகள் இந்திய அணியில் உள்ள வீரர்களோடு வீடியோ கால் மூலமாகவே அல்லது மற்ற டிஜிட்டல் தொடர்புகள் மூலமாகவே பேச எந்தத் தடையும் இல்லை'' என்று சொல்லியிருக்கிறது பிசிசிஐ.

விராட் கோலி, ரோஹித், கேஎல் ராகுல் என மூன்று ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிவரும் தற்போதைய இந்திய அணியில் பயோபபுளில் இருக்கிறார்கள்.