Published:Updated:

`சீனியர்களுக்கு நோ; ஜூனியர்களுக்கு வாய்ப்பு' - வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி!

ராம் பிரசாத்

உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய தவான், மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணிகுறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த சில நாள்களாக நிலவிவந்த குழப்பங்களுக்கு விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகவும் கேப்டன்சி கோலி மற்றும் ரோஹித் வசம் பிரித்துக் கொடுப்பதாகக் கடந்த சில நாள்களாக ஒரு தகவல் உலா வந்தது.

ரோஹித்
ரோஹித்

இந்த நிலையில், பிசிசிஐ அறிவிப்பில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு வழக்கம் போலலே கோலியே கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும்; அணியின் நலனை கருத்தில்கொண்டு தேர்வுக்குழுவினர் தோனியிடம் பேச வேண்டும் என சேவாக், கம்பீர் ஆகியோர் பேசியிருந்தனர். தோனி ஓய்வை அறிவிக்கவில்லை என்றால், அவரை அணியில் சேர்ப்பதில்லை என்பது பிசிசிஐ-யின் திட்டம் என்ற தகவலும் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவிவந்தது.

இந்நிலையில்தான், தோனியின் பெயர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இல்லை. ஆனால், அதற்கான காரணம் ஏற்கெனவே பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். தோனி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை. 2 மாதம் ஓய்வு கேட்டுள்ளார். ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கும் தோனி, இந்த இரண்டு மாத ஓய்வைத் தனது துணை ராணுவக் குழுவுடன் செலவிட உள்ளார். இந்தத் தகவலை செலெக்ஷ்ன் கமிட்டிக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். தோனியின் முடிவை கோலியிடமும் தேர்வுக் குழுவிடமும் தெரிவித்துவிட்டோம்" என்றார்.

தோனி
தோனி

இதேபோல், தினேஷ் கார்த்திக் பெயர் இடம்பெறவில்லை. உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய தவான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அவர் இடம்பிடித்துள்ளார். ரஹானே, புஜாரா, அஸ்வின், விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஏராளமான இளம்வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவ்தீப் சைனி, கலீல் அஹமது, ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி ( கேப்டன்), ரஹானே( துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

அஷ்வின்
அஷ்வின்

ஒருநாள் அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் ஷர்மா ( துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, நவ்தீப் சைனி.

டி-20 அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் ஷர்மா ( துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருணல் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.