Published:Updated:

`ஹை கமிஷனுக்கு அலர்ட் கொடுத்த பி.சி.சி.ஐ!'- இந்திய வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலா?

மலையரசு

ஆண்டிகுவாவில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் மூன்றுநாள் பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

indian cricket players
indian cricket players ( bcci )

இந்திய அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் கோலியின் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றது. இதேபோல் மூன்றாவது ஆட்டத்திலும் கோலி சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி ஒருநாள் தொடரையும் வென்றது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 22-ம் தேதி தொடங்கவுள்ளது.

indian cricket players
indian cricket players
bcci

தற்போது ஆண்டிகுவாவில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் மூன்றுநாள் பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், ஆண்டிகுவாவில் விளையாடிவரும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ-யிடம் தெரிவித்ததாகவும் வடஇந்திய ஊடகங்களிலும் வலைதளங்களிலும் செய்திகள் வெளியாயின.

இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட பி.சி.சி.ஐ இதுகுறித்து விசாரணை நடத்தியது. முடிவில், வீரர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல் புரளி என பி.சி.சி.ஐ கூறியுள்ளது. எனினும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரிகள், ``இது ஒரு மோசடி மின்னஞ்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் நாங்கள் செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளோம்.

indian cricket players
indian cricket players
AP

வீரர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தும்வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆண்டிகுவாவில் உள்ள இந்திய உயர் அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் அங்குள்ள அரசிடம் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசிவருகிறார்கள். வீரர்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படின் பாதுகாப்பை அதிகப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்" என ANI செய்தி நிறுவனத்திடம் பி.சி.சி.ஐ அதிகாரிகள் பேசியுள்ளனர்.