Published:Updated:

15 பந்துகளில் அரைசதம்.... ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்கள்... சிட்னி சிக்சர்ஸ் வென்றது எப்படி? #BBL

#BBL
#BBL

அடிலெய்டு அணியில் வொரால் சிறப்பாக பந்துவீசினார். அவர் ஓவரில்தான் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேலும் 18 டாட் பால்களை வீசினார். ஆனால், இவரின் 4 ஓவர்களையும் ஒரே மூச்சாக முதல் ஸ்பெல்லிலேயே வீசவைத்து முடித்துவிட்டார் அலெக்ஸ் கேரி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியால் கொஞ்சம் கவனமிழந்து போயிருந்த பிக்பேஷ் லீக் போட்டிகள் (#BBL) மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. நேற்று அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸுக்கு எதிராக சிட்னி சிக்சர்ஸின் டேனியல் கிறிஸ்டியன் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.

பிக்பேஷ் லீகின் 11-வது போட்டியில் அலெக்ஸ் கேரி தலைமையிலான அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் டேனியல் ஹியூஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிட்னி சிக்சர்ஸ் அணியில் நியூஸிலாந்து தொடரை முடித்துக்கொண்டு வந்திருக்கும் ஹோல்டர் புதுவரவாக சேர்ந்திருந்தார்.

சிட்னி சிக்சர் அணியின் ஓப்பனர்களாக ஜோஷ் பிலிப்பும், ஜாக் எட்வர்ட்ஸும் களமிறங்கினர். அடிலெய்டு அணியின் சார்பாக டேனியல் வொரால் முதல் ஓவரை விசினார். வொரால் வீசிய அட்டகாசமான அவுட் ஸ்விங்கர்களை தொடக்கூட முடியாமல் திணறினார் ஜோஷ் பிலிப். இந்த முதல் ஓவரிலேயே 5 டாட் பால்களுடன் 2 ரன்கள் மட்டுமே வந்தது. அவுட் ஸ்விங்குக்கு பிலிப் தடுமாறியதை பார்க்கும் போதே வொரால் பவர்ப்ளேக்குள்ளேயே இந்த ஓப்பனிங் கூட்டணியை எப்படியும் பிரித்துவிடுவார் என்றே தோன்றியது. அதேபோலவே 3-வது ஓவரின் கடைசிப்பந்தில் பிலிப்பை அவுட் ஆக்கினார் வொரால். ஃபைன் லெக் ஃபீல்டர் வட்டத்திற்கு உள்ளே இருந்ததால் ஒரு ஸ்கூப் ஷாட் ஆட பிலிப் முயல எட்ஜ்ஜாகி கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார். இந்த ஓவரில் விக்கெட்டோடு வெறும் 4 ரன்கள் மட்டுமே சென்றது.

#BBL
#BBL

வொராலின் சிறப்பான பந்துவீச்சால் முதல் பவர்ப்ளேயில் 19 ரன்கள் மட்டுமே சிட்னி சிக்சர்ஸ்க்கு கிடைத்தது. வொரால் சிறப்பாக வீசியதால் அவரின் ஸ்பெல்லை சீக்கிரமே முடித்துவிட முடிவு செய்தார். முதல் ஸ்பெல்லிலேயே நான்கு ஓவர்களையும் வீசினார் வொரால். 7வது ஓவரில் ஜாக் எட்வர்ட்ஸும் வொராலின் பந்தில் எட்ஜ்ஜாகி அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வொரால் நான்கு ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வீசிய 24 பந்துகளில் 18 பந்துகளை டாட் பால்களாக வீசினார். இதன் காரணமாக சிட்னி சிக்சர்ஸுக்கு முதல் 10 ஓவர்களில் 52 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

ரஷித்கான் வீசிய 12-வது ஓவரில் ஜேம்ஸ் வின்ஸி 19 ரன்னில் போல்ட் ஆக, நம்பர் 5-ல் ஆல்ரவுண்டரான டேனியல் கிறிஸ்டியன் உள்ளே வந்தார். இதன்பிறகுதான் அதிரடியே ஆரம்பித்தது. ஸ்காட் வீசிய 13-வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள் ஸ்கொயர் லெகிலும் மிட் விக்கெட்டிலும் பறந்தது. அத்துடன் ஒரு பவுண்டரியும் அடித்து 22 ரன்களை சேர்த்தார் கிறிஸ்டியன். அடுத்து ரஷீத்கான் வீசிய 14-வது ஓவரிலும் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார் கிறிஸ்டியன். இதுதான் சரியான நேரம் என சிட்னி சிக்சர்ஸ் அணி பவர் சர்ஜை எடுத்தது. வெறும் 2 ஃபீல்டர்கள் மட்டும் வட்டத்திற்கு வெளியே நிற்க, வெஸ் அகர் வீசிய 15-வது ஓவரில் 3 பவுண்டரிக்களை அடித்து 15 பந்துகளில் அரைசதத்தை கடந்தார் கிறிஸ்டியன். இது பிக்பேஷ் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக அரைசதம்.

அரைசதம் அடித்த அடுத்த பந்தே ஸ்கோயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிறிஸ்டியன் உள்ளே வந்தபோது அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 61-3 என இருந்தது. அவர் ஆடிவிட்டு சென்ற அடுத்த 3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 115-4 என உயர்ந்திருந்தது. ஆட்டத்தையே மொத்தமாக மாற்றிவிட்டார். கடைசி 5 ஓவர்களில் சில்க், ஹூக்ஸ், ஹோல்டர் என இவர்கள் எல்லாம் கணிசமான பங்களிப்பை அளிக்க இறுதியில் அணியின் ஸ்கோர் 177 ஆக உயர்ந்தது. கடைசி 8 ஓவர்களில் மட்டும் சிட்னி சிக்சர்ஸ் அணி 116 ரன்களை சேர்த்தது.

#BBL
#BBL

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்களாக பிலிப் சால்ட்டும், ஜேக் வெதரால்ட்டும் களமிறங்கினர். வார்சூயிஸ் வீசிய முதல் ஓவரிலேயே தேர்டு மேனில் சால்ட் ஒரு கேட்ச்சை கொடுக்க அந்த கேட்சை டிராப் செய்தார்கள். இதன்பிறகு இந்தக் கூட்டணி 4 ஓவர் பவர்ப்ளேவை எந்த தடங்கலுமின்றி முழுமையாக பயன்படுத்திக்கொண்டது. பவர்ப்ளேயில் மட்டும் 47 ரன்களை எடுத்துவிட்டது இந்தக் கூட்டணி. சிட்னி சிக்சர்ஸ் 10 ஓவர்களில் எடுத்த 52 ரன்களை 5-வது ஓவரிலேயே தாண்டி Bash Boost புள்ளியை வென்றுவிட்டது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ். அதே 5-வது ஓவரில் சிட்னி சிக்சருக்கும் முதல் விக்கெட் கிடைத்தது. பேட்டிங்கில் அதிரடி காட்டிய கிறிஸ்டியன் வீசிய இந்த ஓவரில் இன்சைட் அவுட் ஷாட்டுக்கு முயன்று 28 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சால்ட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன்பிறகு அடிலெய்டு சார்பாக டார்கெட்டை சேஸ் செய்ய பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் உதவவில்லை. ஓவருக்கு ஓவர் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. சிட்னி சிக்சர்ஸ் சார்பாக மெனேந்தி, ஓ கீஃப், பிராத்வெயிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் அடிலெய்டு அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகனாக டேனியல் கிறிஸ்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#BBL
#BBL

டேனியல் கிறிஸ்டியன் பேட்டிங் ஆடிய 3 ஓவர்கள்தான் ஆட்டத்தை சிட்னி சிக்சர்ஸ் பக்கம் திருப்பியது. அடிலெய்டு அணியில் வொரால் சிறப்பாக பந்துவீசினார். அவர் ஓவரில்தான் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தது. மேலும் 18 டாட் பால்களை வீசினார். ஆனால், இவரின் 4 ஓவர்களையும் ஒரே மூச்சாக முதல் ஸ்பெல்லிலேயே வீசவைத்து முடித்துவிட்டார் அலெக்ஸ் கேரி. ஒரு ஓவரை மீதம் வைத்திருந்து பின்னால் கிறிஸ்டியன் பேட்டிங் ஆடும் போது பயன்படுத்தியிருந்தால், அவரின் விக்கெட் சீக்கிரமே விழுந்திருப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்திருந்தால் ஸ்கோரும் 150-க்குள் சுருங்கியிருக்கும்.

அடிலெய்டுக்கு கிடைத்த அதிரடியான ஓப்பனிங்கிற்கு சேஸும் சுலபமாக இருந்திருக்கும். அலெக்ஸ் கேரி எடுத்த ஒரு தவறான முடிவினால் அடிலெய்டு அணி தோல்வியை தழுவியிருக்கிறது. தோற்றாலும் அந்த Bash Boost பாயின்டை அடிலெய்டு வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு