Published:Updated:

ஒரே ஓவர்... ஒரே விக்கெட்... 13 ரன்கள்... அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் வென்றது எப்படி!? #BBL

#BBL
#BBL

ப்ரிஸ்பேன் ஹீட்ஸ் பௌலிங் செய்த போது ஓப்பனிங் கூட்டணியான சால்ட் மற்றும் ரென்சா வை சீக்கிரமே அவுட் ஆக்க மூன்று முறை ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ப்ரிஸ்பேன் அத்தனையையும் கோட்டைவிட்டது. #BBL

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் ப்ரிஸ்பேன் ஹீட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் அடிலெய்டு அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ப்ரிஸ்பேன் அணியின் கேப்டன் பியர்சன் டெய்ல் எண்டர்களோடு கூட்டணி போட்டு அதிரடியாக அரைசதம் அடித்திருந்த போதும் அவரால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை.

க்றிஸ் லின் காயம் காரணமாக ஓய்விலிருப்பதால் ப்ரிஸ்பேன் அணியின் கேப்டன் பொறுப்பு பியர்சனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

பேட் ஃப்ளிப் முறையில் போடப்பட்ட டாஸில் பியர்சன் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

அடிலெய்டு அணியின் சார்பாக பிலிப் சால்ட்டும் வெதரால்ட்டும் ஓப்பனர்களாக களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர் பார்ட்லெட் வீசிய முதல் ஓவரிலேயே வெதரால்டு டக் அவுட் ஆனார். பந்தின் வேகத்தைக் கணிக்காமல் கட் ஷாட் ஆட முயன்று lbw ஆகி வெளியேறினார் வெதரால்ட்டு. இதன்பிறகு சால்ட்டும் ரென்சாவும் கூட்டணி போட்டனர். இவர்கள் பொறுப்பை உணர்ந்து பொறுமையாக பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.

Adelaide Strikers | Salt | #BBL
Adelaide Strikers | Salt | #BBL

ஸ்டெக்கிட்டீ வீசிய 4 வது ஓவரில் சால்ட் இரண்டு பவுண்டரிகளை அடிக்க பவர்ப்ளே முடிவில் அடிலெய்டு அணி 24 ரன்களை சேர்த்தது. ஸ்டெக்கிட்டீ Vs சால்ட் ரைவல்ரி சுவாரஸ்யமாக இருந்தது. ஸ்டெக்கிட்டீயின் பௌலிங் மற்றும் ஃபீல்டிங்கில் மட்டும் 3 முறை ரன் அவுட்டிலிருந்து தப்பித்திருந்தார் சால்ட். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து அவ்வபோது பவுண்ட்ரிகள் அடித்து 60 ரன்களைச் சேர்த்து செட் ஆகியிருந்த இந்தக் கூட்டணியை ஸ்டெக்கீட்டீ 10 வது ஓவரில் பிரித்தார். இந்த ஓவரில் இவர்கள் இருவரையுமே வெளியேற்றினார் ஸ்டெக்கீட்டீ. ஒரு ஷாட் பாலில் தூக்கியடித்து ஃபைன் லெகிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்களில் வெளியேறினார் ரென்சா.

அடுத்த பந்திலேயே சால்ட்டும் தலைக்கு மேலேயே தூக்கியடித்து ஸ்டெக்கீட்டியிடமே கேட்ச் கொடுத்து 25 ரன்களில் வெளியேறினார். இந்த இருவருமே ஒரே ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயன்றது மிகப்பெரிய தவறு. 9 ஓவர்கள் நின்று செட் ஆகிவிட்டார்கள். இந்த ஒரு ஓவரையும் பொறுமையாக ஆடியிருந்தால் அடுத்து 11 வது ஓவரில் பவர் சர்ஜ் எடுத்து ரன்ரேட்டை உயர்த்தியிருக்க முடியும். அடுத்த 10 ஓவர்களில் வெல்ஸும் நீல்செனும் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். 17-18 வது ஓவரில் பவர் சர்ஜை எடுத்த இந்த கூட்டணி இந்த ஓவர்களில் 25 ரன்களைச் சேர்த்தது. கடைசியில் இவர்கள் இருவருமே அவுட் ஆக, 20 வது ஓவரில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் பவுண்டரி அடித்து ஸ்கோரை 149 ஆக உயர்த்திவிட்டார் ரஷீத்கான்.

#BBL
#BBL

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ப்ரிஸ்பேன் ஹீட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு இருக்கும் பேட்டிங் வலிமைக்கு இந்த டார்கெட் ரொம்பவே சுலபமாக இருக்கும் என்றே எண்ணப்பட்டது. ஆனால், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் தங்களின் கிடுக்குப்பிடி பௌலிங்கால் ப்ரிஸ்பேனைத் தடுமாற செய்துவிட்டனர். முதல் இரண்டு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட் விழுந்தது. வொரால் வீசிய முதல் ஓவரில் ஓப்பனர் ஹெஸ்லெட் பாயிண்ட் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து ப்ரிக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் லின்னுக்கு பதிலாக அணிக்குள் வந்த மிலென்கோ மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்த இரண்டு ஓவர்களில் லாரன்ஸ் ஒரு சில பவுண்டரிகளை அடிக்க 4 ஓவர்கள் முடிவில் 25 ரன்கள் கிடைத்திருந்தது. 5 வது ஓவரில் ரஷீத்கான் அறிமுகமான முதல் பந்திலேயே ப்ரையண்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அதிசயமாக அவர் வீசிய லெக் ப்ரேக்கில் எட்ஜ்ஜாகி கீப்பரிடம் கேட்ச் ஆனார் ப்ரையண்ட். சீக்கிரமே மூன்று விக்கெட் விழுந்ததால் ரன் வேகமும் குறைந்தது. 8 வது ஓவரில் ரஷீத்கான் வீசிய ஒரு கூக்ளியில் பெரிய ஷாட்டுக்கு முயன்று லாரன்ஸ் ஆட்டமிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்துக்கொண்டே இருந்தன. 10 ஓவர்கள் முடிவில் ப்ரிஸ்பேன் அணி 50 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ப்ரிக்ஸும் பீட்டர் சிடிலும் வீசிய 12, 13, 14 ஆகிய ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் விழ 68 க்கு 8 என தோல்வியை ஏறக்குறைய உறுதி செய்த நிலையில்தான் அந்த மேஜிக் கூட்டணி உருவானது. முஜிபூர் ரஹ்மானும் கேப்டன் பியர்சனும் விக்கெட்டை கொடுக்காமல் பவுண்டரிகளை டார்கெட் செய்ய தொடங்கினர். 15-16 ஓவர்களில் பவர் சர்ஜை எடுத்தது இந்த கூட்டணி. சக ஆப்கன் வீரரான ரஷீத்கான் வீசிய 15 வது ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சருடன் 15 ரன்களை சேர்த்தார் முஜீப். இந்த ஓவரில் மொத்தமாக 20 ரன்கள் கிடைத்தது.

#BBL
#BBL

அடுத்து பீட்டர் சிடில் வீசிய 16 வது ஓவரை பியர்சன் வைத்து செய்தார். ஃபைன் லெக்குக்கும் ஸ்கொயருக்கும் இடையே சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டார். இந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள். ஆக, மொத்தம் பவர் சரிஜில் மட்டும் 43 ரன்கள். தோல்வி உறுதி என இருந்த ஆட்டத்தை அப்படியே மாற்றிவிட்டனர். 18 வது ஓவரில் பீட்டர் சிடில் வீசிய யார்க்கரில் முஜீப் 18 ரன்னில் போல்டாகி விட ஆட்டம் இன்னும் பரபரப்பானது. ஒரு விக்கெட் மட்டுமே கையிலிருக்கும் நிலையில் இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை பௌலரான லாஃப்லின் எதிர்கொண்டார். இந்த ஓவரில் பியர்சனுக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவே இல்லை. மூன்று பந்துகளை நேராக ஃபீல்டருக்கு தட்டிவிட்ட லாஃப்லின் இரண்டு பந்துகளில் பீட்டன் ஆனார். ஒரு பந்து மட்டும் எட்ஜ் ஆகி பவுண்டரி ஆனது.

இறுதி ஓவர் இன்னமும் பரபரப்பானது. ஸ்ட்ரைக்கில் பியர்சன் நிற்க, வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டன. வொரால் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தையே ஃபைன் லெகில் பவுண்டரியாக்கினார் பியர்சன். அடுத்த பந்தை மிட்விக்கெட்டில் அடித்துவிட்டு இரண்டு ரன் ஓடிவிட்டார். இதன் பிறகு நடந்ததுதான் சோகமே. அடுத்த மூன்று பந்துகளையும் பவுண்டரில் லைன் வரை தட்டிவிட்டும் ரன் ஓடாமல் நின்று விடுவார் பியர்சன். கடைசி பந்தில் 7 ரன் தேவை என்கிற போது ஃபைன் லெகில் ஒரு பவுண்டரி மட்டுமே பியர்சனால் அடிக்க முடிந்தது. அடிலெய்டு அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் தோற்றாலும் 36 பந்துகளில் 69 ரன்கள் அடித்த ப்ரிஸ்பேன் கேப்டன் பியர்சனுக்கே ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

Bash Boost பாயிண்டோடு சேர்த்து நான்கு புள்ளிகளை வென்றுவிட்டது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்.

ப்ரிஸ்பேன் ஹீட்ஸ் பௌலிங் செய்த போது ஓப்பனிங் கூட்டணியான சால்ட் மற்றும் ரென்சா வை சீக்கிரமே அவுட் ஆக்க மூன்று முறை ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ப்ரிஸ்பேன் அத்தனையையும் கோட்டைவிட்டது. இவர்கள் சீக்கிரம் வெளியேறியிருந்தால் ஸ்கோர் இன்னமும் குறைந்திருக்கும்.

கடைசி ஓவரில் பியர்சன் ரன் ஓடாமல் தவிர்த்த எல்லா பந்துகளுமே பவுண்டரி லைன் அருகில் சென்றவைதான். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பார்த்திருந்தால் வெற்றியடைந்திருக்கலாம்.

Rashid Khan | #BBL
Rashid Khan | #BBL

டிசைன் டிசைனாக விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் பிக்பேஷ் லீகில் இன்னமும் DRS மட்டும் ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. மேட்ச்சுக்கு ஒரு தவறான முடிவை அம்பயர்கள் வழங்கி ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிடுகின்றனர். இன்றைக்கு ப்ரிஸ்பேன் அணிக்காக நம்பர் 5-ல் வந்து நல்ல செட்டில் ஆகி 22 ரன்கள் அடித்திருந்த டிம் கூப்பர் 12-வது ஓவரில் ப்ரிக்ஸ் பந்துவீச்சில் lbw ஆனார். இது அவுட்டே கிடையாது. கூப்பர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயல பந்து முதலில் பேட்டில் பட்டு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருக்கும் காலில் பட்டது. தெளிவாக நாட் அவுட் என தெரியும் இதற்கு அவுட் கொடுத்து ப்ரிஸ்பேன் ஹீட்ஸை கூடுதலாக தடுமாற வைத்தார் அம்பயர். இதேமாதிரிதான் கடந்த போட்டியில் ஆண்ட்ரூ டை ஓவரில் கவாஜாவுக்கு ஒரு க்ளீன் எட்ஜ் கேட்ச்சை இல்லவே இல்லை என்று சாதித்திருப்பார் அம்பயர்.

அந்த DRS ஐயும் கொண்டு வந்தா என்ன குறைஞ்சா போயிருவீங்க!?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு