Published:Updated:

`தடையை எதிர்கொள்ளும் ஷகிப்..?’ - இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

2019 உலகக் கோப்பையில், ஆல்-ரவுண்டராக அசத்திய ஷகிப்புக்குத் தடை அளிக்கப்பட உள்ளது, வங்கதேச அணிக்குப் பின்னடைவாக அமையும்.

ஷகிப்
ஷகிப்

நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வங்கதேச அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் இத்தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Shakib Al Hasan
Shakib Al Hasan

ஏற்கெனவே, ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து சீனியர் வீரர் ஷகிப்-அல்-ஹசன் தலைமையில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த இரு நாள்களாக நடைபெற்றுவந்த பயிற்சி ஆட்டத்திலும் ஷகிப் பங்கேற்காத நிலையில், இந்திய அணியில் பங்கேற்கவிருக்கும் பிளேயிங் லெவனில் ஷகிப்பின் பெயர் இடம்பெறுவதில் சந்தேகம் உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் அணித் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த நஸ்முல், "பயிற்சி ஆட்டத்தில் ஷகிப் பங்கேற்கவில்லை. மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில், விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஷகிப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து, ஷகிப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவுக்கு செல்லவிருக்கும் வங்கதேச அணியில் ஷகிப் இடம்பிடிப்பாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது" என்றார்.  

Shakib Al Hasan
Shakib Al Hasan
AP

இதனிடையே, சூதாட்டத் தரகர்கள் தொடர்புகொண்டது சம்பந்தமாக ஐசிசி, ஷகிப் அல் ஹசனிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு, ஷகிப் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஷகிப் அல் ஹசனுக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

2019 உலகக் கோப்பையில் ஆல்-ரவுண்டராக அசத்திய ஷகிப்புக்குத் தடை அளிக்கப்பட உள்ளது, வங்கதேச அணிக்குப் பின்னடைவாக அமையும்.

40 டாட் பால்கள்... 5 விக்கெட்டுகள்..
ஷகிப் சுழலில் வீழ்ந்த ஆப்கானிஸ்தான்! #BANvAFG

இந்நிலையில், இந்தியாவில் விளையாட இருக்கும் வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டனாக முஷ்ஃபிகுர் ரஹீமும், டி-20 கேப்டனாக மஹமதுல்லா அல்லது மொசடெக் ஹுசைனும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

அவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்! #VikatanDiwaliMalar2019