Published:Updated:

"அவரைப் போல் விளையாடுவதையே கனவாகக் கொண்டிருந்தேன்!"- பாபர் அசாமின் ரோல் மாடல் யார் தெரியுமா?

பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"அவரைப் போல் விளையாடுவதையே கனவாகக் கொண்டிருந்தேன்!"- பாபர் அசாமின் ரோல் மாடல் யார் தெரியுமா?

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Published:Updated:
பாபர் அசாம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளதால் இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்தாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அந்நேர்காணலில் பேசிய பாபர் அசாம், "19 வயதுக்கு  உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்ட நான், பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் அப்போது எதிர்பார்த்த அளவுக்கு என்னால் விளையாட முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு நான் இன்னும் தயாராகவில்லை என்று எண்ணி பாகிஸ்தான் அணியிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தேன். அந்த நேரங்களில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் எனக்கு மிகவும் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தார்.

பாபர் அசாம்
பாபர் அசாம்

அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் குவித்தேன். அங்கிருந்து என்னுடைய கிரிக்கெட் பயணம் ஆரம்பமானது" என்று தெரிவித்திருக்கிறார். 

மேலும், அந்நேர்காணலில் பாபர் அசாமிடம் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உங்கள் ரோல் மாடல் யார் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த அவர், "நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்தே எனது ரோல் மாடலாக இருந்தவர் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ்தான். சிறு வயது முதலே அவர் விளையாடும் விதம் மற்றும் அவருடைய ஷாட்களை டி.வியில் பார்த்து நான் பயிற்சி செய்வேன்.

டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ்

அவரைப் போல் விளையாடுவதையே என்னுடைய கனவாகக் கொண்டிருந்தேன். எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கடினமான காலம் வரும். அதேபோன்று சில மாதங்களாகப் போட்டிகளில் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. என்னுடைய தவறுகளைச் சரி செய்து கொண்டு நடைபெற இருக்கின்ற இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்படுவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.