Published:Updated:

`இங்கிலாந்தை வீழ்த்துவோம்; அதிர்ச்சி தோல்வியாக இருக்காது!’ – பாகிஸ்தான் உத்தரவாதம் #ENGvPAK

`இங்கிலாந்தை வீழ்த்துவோம்; அதிர்ச்சி தோல்வியாக இருக்காது!’ – பாகிஸ்தான் உத்தரவாதம் #ENGvPAK

உலகக் கோப்பைக்கு முன் முடிந்த ஒருநாள் தொடரில் அவர்கள் (இங்கிலாந்து) 1,424 ரன்கள் அடித்தார்கள். நாங்கள் 1,370 (1356) ரன்கள் அடித்தோம். அவர்களை விட 70 ரன்கள்தான் குறைவு.

Published:Updated:

`இங்கிலாந்தை வீழ்த்துவோம்; அதிர்ச்சி தோல்வியாக இருக்காது!’ – பாகிஸ்தான் உத்தரவாதம் #ENGvPAK

உலகக் கோப்பைக்கு முன் முடிந்த ஒருநாள் தொடரில் அவர்கள் (இங்கிலாந்து) 1,424 ரன்கள் அடித்தார்கள். நாங்கள் 1,370 (1356) ரன்கள் அடித்தோம். அவர்களை விட 70 ரன்கள்தான் குறைவு.

`இங்கிலாந்தை வீழ்த்துவோம்; அதிர்ச்சி தோல்வியாக இருக்காது!’ – பாகிஸ்தான் உத்தரவாதம் #ENGvPAK

இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் மோதவிருக்கும் அணிகள், இங்கிலாந்து – பாகிஸ்தான். போட்டி நடைபெறும் இடம், நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட்ப்ரிட்ஜ் மைதானம். அணிகளையும் மோதும் இடத்தையும் வைத்தே இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள், யார் ஜெயிப்பார்கள் என்று... பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று, உலகக் கோப்பையின் முதல் போட்டியில் 105 ரன்களில் சுருண்டு, தொடர்ந்து 11 சர்வதேசப் போட்டிகளில் தோற்று, மோசமான ரெக்கார்டு வைத்திருக்கிறது, 1992–ல் உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தான். இந்தநிலையில்தான், இன்று அவர்கள் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறார்கள். ஆனாலும், பாகிஸ்தான் பெளலிங் கோச் அதீத நம்பிக்கையில் இருக்கிறார்.

உலகக் கோப்பை 2019
உலகக் கோப்பை 2019

``நாங்கள் அவர்களை வீழ்த்துவோம். அது ஒன்றும் அதிர்ச்சித் தோல்வியாக இருக்காது. எங்களிடம் அவர்களை வீழ்த்தும் திறமை இருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன் முடிந்த ஒருநாள் தொடரில் அவர்கள் (இங்கிலாந்து) 1,424 ரன்கள் அடித்தார்கள். நாங்கள் 1,370 (1356) ரன்கள் அடித்தோம். அவர்களை விட 70 ரன்கள்தான் குறைவு. எங்கள் ஃபீல்டிங்கும் தரமாக இல்லை. அந்தத் தொடரில் போதிய அனுபவம் இல்லாத பெளலிங் லைன் அப் உடன் விளையாடினோம் என்பது எங்களுக்கு போனஸ்.’’ என, `வலிக்கலையே’ மோடில் பதில் சொன்னார், பாகிஸ்தான் பெளலிங் பயிற்சியாளர் அசார் மகமது.

மேட்ச் ப்ரிவியூ
மேட்ச் ப்ரிவியூ

ஒரு சப்போர்ட்டிங் ஸ்டாஃபாக அணிக்குள் பாசிட்டிவ் எனர்ஜியைப் பரப்புவது நல்ல விஷயம்தான். இதை அவர் பாகிஸ்தான் டிரெஸ்ஸிங் ரூமில், டீம் மீட்டிங்கில் சொல்லி வெறியேற்றியிருக்கலாம். பிரஸ் மீட்டில் சொன்னதுதான் விஷயம்.

அசார் மகமது சொல்வது ஒருபுறம் இருக்க, முதல் போட்டி முடிந்த பின் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் சொன்ன விஷயத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். `அமீர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கலாம். ஆனால், அவரால் முன்பு போல ஆக்ரோஷமாக பந்துவீச முடியவில்லை. லைன் அண்ட் லென்த் மிஸ்ஸாகிறது. 80 மைல் வேகத்தில்தான் வீசுகிறார். ஒரு முன்னணி பெளலருக்கு இது அழகல்ல’ என்றார் மிஸ்பா உல் ஹக்.

எல்லோரும் அமீரின் கம்பேக்கை பாராட்டியபோது, மிஸ்பா சுட்டிக் காட்டிய இந்தக் குறையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அமீர் மட்டுமல்ல, ஹசன் அலி பெர்ஃபார்மன்ஸிலும் திருப்தியில்லை.

சர்ஃபராஸ் அகமது
சர்ஃபராஸ் அகமது

போட்டி நடக்கும் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில்தான் கடந்த ஆண்டு 481 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்திருந்தது இங்கிலாந்து. அந்த பிட்ச் குறித்த கேள்விக்கும் `ஜஸ்ட் லைக் தட்’ என பதில் சொன்னார் அசார். `இந்த பிட்ச்சில்தான் உலக சாதனைக்கு காரணமான 480 ரன்கள் எடுக்கபப்ட்டது. ஆனால், அந்த ஸ்கோரை எட்ட அவர்கள் 300 பந்துகளைச் சந்திக்க வேண்டும். ஆனால், பத்து விக்கெட்டுகளை வீழ்த்த, எங்களுக்கு பத்து நல்ல பந்துகள் போதும்’’ என விளக்கம் கொடுத்தார் அவர்.

பாகிஸ்தான் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம். ஃபகர் ஜமான் மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஷார்ட் பால்களை சமாளிக்க முடியாமல் `கூண்டோடு கைலாசம்’ போன கதையாக பெவிலியன் திரும்பினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். `தோல்வியை விட, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பலவீனம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இதை எப்படி அவர்கள் குறுகிய இடைவெளியில் சரிக்கட்டப் போகிறார்கள், வெஸ்ட் இண்டீஸைப் பார்த்து எல்லா அணிகளும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்தால், பாகிஸ்தான் பாடு திண்டாட்டம்தான்’ என சங்கடப்பட்டார் ரமீஸ் ராஜா. வேலிட் பாயின்ட் அது. ஏனெனில், ஷார்ட் பால், பெளன்சர் வீசி பேட்ஸ்மேன்களை காவு வாங்கக் காத்திருக்கிறது ஆர்ச்சர் தலைமையிலான இங்கிலாந்து பெளலிங் யுனிட்.

பயிற்சியில் பட்லர்
பயிற்சியில் பட்லர்

ஆனால், இங்கிலாந்து அணியோ பாகிஸ்தானைக் குறைத்து மதிப்பிடவில்லை. `பாகிஸ்தான் கடந்த போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறார்கள். இந்தியாவை வீழ்த்தியிருக்கிறார்கள். எங்களை வீழ்த்தியிருக்கிறார்கள். அதனால், குறைத்து மதிப்பிடாமல் அதற்கேற்பத்தான் தயாராவோம்’’ என்றார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.

நேருக்கு நேர்

இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 87 சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்து 53, பாகிஸ்தான் 31 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. மூன்று போட்டிகளில் முடிவு இல்லை. உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வென்றுள்ளன.

இரு அணிகளும் இதுவரை..!
இரு அணிகளும் இதுவரை..!

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இங்கிலாந்து: (உத்தேசம்) பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஆர்ச்சர், பிளங்கட்/மார்க்வுட், கிறிஸ் வோக்ஸ்/டாம் கரன், அடில் ரஷித்.

பாகிஸ்தான்: (உத்தேசம்) இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம், சோயிப் மாலிக், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது, ஆசிஃப் அலி, சதாப் கான், முகமது அமீர், ஹசன் அலி, வஹாப் ரியாஸ்

இதற்கு முன்...
இதற்கு முன்...

முக்கிய வீரர்கள்

இங்கிலாந்து: ஜோ ரூட், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்

பாகிஸ்தான்: பாபர் அசாம், ஃபகர் ஜமான், முகமது அமீர்

வெற்றி வாய்ப்பு : இரு அணிகளும் மோதிய கடந்த தொடரில், பாகிஸ்தானும் மூன்று முறை 300+ ரன்களை அநாயாசமாக எட்டியதால், இங்கிலாந்தின் பெளலிங் பலவீனமாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், முதல் போட்டியில் மாஸ் என்ட்ரி கொடுத்து அதையும் பலப்படுத்திவிட்டார் ஆர்ச்சர். பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்று துறையிலும் பாகிஸ்தானை விட இங்கிலாந்து எங்கேயோ உள்ளது.