Published:Updated:

``எனக்கு தோனியிடம் ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது!” - முன்னாள் கேப்டன் அசாருதீன்

பிரேம் குமார் எஸ்.கே.

ஒரு கிரிக்கெட் வீரர் தொடர்ந்து விளையாட விரும்பும் பட்சத்தில் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து அவரிடம் பேச வேண்டும்!

தோனி
தோனி ( AP )

உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்து இந்திய அணியின் அடுத்த தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு வரை வந்துவிட்டது. ஆனால் தோனி தொடர்பான பேச்சுக்கு மட்டும் குறைவே இல்லை. மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து தானாக விலகிய தோனி ராணுவ கேம்பில் அடுத்த இரு மாதங்களைச் செலவிடவுள்ளார்.

தோனி
தோனி

இதற்கான அனுமதியும் அவருக்குக் கிடைத்து விட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனிடம் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அசாருதீன், ``ஒரு கிரிக்கெட் வீரர் தொடர்ந்து விளையாட விரும்பும் பட்சத்தில் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து அவரிடம் பேச வேண்டும். எத்தனை காலம் விளையாட விரும்புகிறீர்கள், எப்படி விளையாடுவீர்கள். ஆட்டத்தில் உங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் போன்ற கேள்விகளை அவர்கள் முன்வைக்கவேண்டும்.

அசாருதீன்
அசாருதீன்
AP

தோனி போன்ற பெரிய வீரர் தனது முடிவு குறித்து உறுதியாக தெரிவிக்க வேண்டும். விரைவில் அது போன்ற ஒரு தகவல் வரும் என்று நம்புகிறேன். காரணம் அதுவரையில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். சிலர் ஓய்வு பெறுங்கள் என்பார்கள். சிலர் தொடர்ந்து ஆடுங்கள் என்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்திலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்திலும் தோனி ஓய்வு பெறக் கூடாது. விளையாட வேண்டும். அவர் தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். அதுதான் இந்திய அணிக்கு நல்லது.

தோனி
தோனி
AP

சில நேரங்களில் அதிகப்படியான கிரிக்கெட் விளையாடியதன் காரணமாக விருப்பம் குறைந்துபோகும். தோனிக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஆனால் எனக்கு அவரிடம் ஒரு கோரிக்கை இருக்கிறது. எப்போது அவர் விளையாடினாலும், கொஞ்சம் அதிரடியாக விளையாட வேண்டும்.

தோனி தற்போது 2 மாதம் ஓய்வில் இருக்கிறார். இந்த 2 மாதம் கழித்து அவர் பேசுவார் என நினைக்கிறேன். அவர் எப்போது முடிவெடுத்தாலும் சரியான முடிவைத்தான் எடுப்பார்” என்றார்.