Published:Updated:

மன அழுத்தம்; தற்காலிக விடுப்பு! - இலங்கைத் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் `திடீர்' விலகல்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெறும் 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய மேக்ஸ்வெல், திடீரென தொடரிலிருந்து விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேக்ஸ்வெல் 
மேக்ஸ்வெல் 

அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், மன அழுத்தப் பிரச்னையால் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெறும் 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய மேக்ஸ்வெல், திடீரென தொடரிலிருந்து விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Maxwell
Maxwell

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி-20 போட்டியில், வார்னர் சதமடிக்க, ஃபின்ச் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அரை சதம் கடக்க, 20 ஓவர் முடிவில் 232 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி. கடினமான இலக்கை  சேஸ் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 99 ரன்கள் எடுத்து போட்டியை இழந்தது. 

``டியர் `பிகில்’ அட்லி... ஃபுட்பால் விளையாட விஜய் மட்டும் போதுமா... இதெல்லாம் வேண்டாமா?''- ஒரு கால்பந்து ரசிகனின் கடிதம்

ப்ரிஸ்பேனில் நடந்த இரண்டாவது போட்டியையும் ஆஸ்திரேலிய அணி எளிதில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையில், மேக்ஸ்வெல் தொடரிலிருந்து விலகுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

Maxwell
Maxwell

``மன அழுத்தப் பிரச்னையால் தவித்து வரும் மேக்ஸ்வெலுக்கு கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆஸ்திரேலிய அணி முழு ஆதரவைத் தரும். விரைவில் அவர் குணமாகி அணியுடன் சேர்ந்து விளையாட வேண்டும்" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் உளவியலாளர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

ஷகிப் ஹசனுக்கு ஏன் இந்தத் தண்டனை... வங்கதேச கிரிக்கெட்டும் கிரிக்கெட் அரசியலும்! #Shakib