Published:Updated:

`இப்படி நடப்பதே அரிது; கிரீன் சிக்னல் கொடுத்த நிர்வாகம்’ - மனைவியைக் காண விரைந்த மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்

பெண்கள் உலகக்கோப்பை டி-20 இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

பெண்கள் உலகக்கோப்பை டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தத்தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை மகுடத்தை சூடப்போவது யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மார்ச் 8-ம் தேதி இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன. இரண்டு நாடுகளிலும் கிரிக்கெட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இறுதிப்போட்டிக்கு பலத்த எதிர்ப்பார்பு இருக்கிறது.

மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலியா ஆண்கள் அணி தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இறுதிப்போட்டியைக் காண்பதற்காக வேகவேகமாகத் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். இதற்குக் காரணம் இருக்கிறது. ஆஸ்திரேலியா மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமன் அலிசா ஹீலி, மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். தன் மனைவியின் ஆட்டத்தைக் காண்பதற்காக விமானத்தில் பறக்கத் தொடங்கிவிட்டார் ஸ்டார்க்.

மிட்செல் ஸ்டார்கின் ஆசைக்கு அணி நிர்வாகமும் பச்சைக் கொடி காட்டிவிட்டது. இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், `நாங்கள் மிட்செல்லை மிகவும் சந்தோஷமாக வழியனுப்பி வைத்துள்ளோம். தாய் நாட்டில் உலகக்கோப்பை இறுதிப்போட்டில் அலிசா ஆடுவதை காணும் வாய்ப்பு மிட்செல்லுக்கு ஒருமுறைதான் கிடைக்கும். நாங்கள் மகிழ்வுடன் அவரை வழியனுப்பியுள்ளோம். மிட்செல் தன் மனைவியை உற்சாகப்படுத்தட்டும் இந்த அற்புதமான தருணத்தை அவர் அனுபவிக்கட்டும்.

மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்

எங்களிடம் நிறைய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என்றார். தாய்நாட்டில் மனைவி விளையாடுவதைப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது.

அடுத்த கட்டுரைக்கு