Published:Updated:

`ரசிகர்கள் இல்லைன்னா வாழ்க்கை கஷ்டம் பாஸ்..!’ - காலி மைதானமும் வைரல் வீடியோவும் #AusVsNz

நியூசிலாந்து வீரர்
நியூசிலாந்து வீரர்

கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிட்னி மைதானமே வெறிச்சோடிக் காணப்படுகிறது

நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. காலிமைதானத்தில் போட்டி நடைபெறுவதால் பார்வையாளர்களின்றி அரங்கம் காணப்படுகிறது. பொதுவாக போட்டி நடைபெறும் போது பந்துகள் சிக்ஸர், பவுண்டரிகளுக்குச் செல்லும்போதும் விக்கெட் விழும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். ரசிகர்களின் இந்த ஆரவாரம் வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுக்கும். எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக நடந்துவருகிறது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி.

சிட்னி மைதானம்
சிட்னி மைதானம்

கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிட்னி மைதானமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. 19 -வது ஓவரின் முதல் பந்தில் ஆரோன் பின்ச் சிக்ஸர் விளாச பந்து ரசிகர்கள் அமரும் கேலரிக்குச் சென்றுவிட்டது. பொதுவாக பந்து கேலரிக்குச் சென்றால் அங்கிருக்கும் ரசிகர்கள் பந்தைப் பிடித்துத் தூக்கி வீசுவார்கள். இன்றைய போட்டியில் யாரும் இல்லாததால் பந்தைத் தேடி நியூசிலாந்து வீரர் ஃபெர்குஷனே சென்றுவிட்டார். பெவிலியனில் இருந்த இருக்கைகளுக்கு நடுவே பந்தைத் தேடிஎடுக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஒவ்வொருவரும் ஒரு கேப்ஷன் பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். ESPN `ரசிகர்கள் இல்லாமல் வாழ்க்கை கடினமானது’ எனப் பதிவிட்டுள்ள கேப்ஷன் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு