Published:Updated:

16.50 கோடி காலி... ஸ்பின்னர்கள் மொயின் அலி, கிருஷ்ணப்ப கெளதமை வாங்கிய சிஎஸ்கே! #IPLAuction

கிருஷ்ணப்ப கெளதம், தோனி
Live Update
கிருஷ்ணப்ப கெளதம், தோனி

சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் மதியம் 3 மணிக்கு ஐபிஎல் ஏலம் தொடங்குகிறது.

18 Feb 2021 2 PM

இன்னும் சற்று நேரத்தில்...

292 வீரர்களில் 61 பேரை இன்று ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்க இருக்கின்றன. 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் 2 கோடி ரூபாய் ஆரம்ப விலையில் இன்று ஏலப் பட்டியலில் இருக்கிறார். ஆனால், இவரின் விலை அதிகமாகப் போகலாம் என்பதால் இவரை இந்த ஏலத்தில் யாரும் எடுப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது.

2021 ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச ஆரம்ப விலை 2 கோடி ரூபாய். இந்தப்பட்டியலில் ஜேசன் ராய், ஸ்டீவ் ஸ்மித் இவர்கள் இருவரும்தான் பேட்ஸ்மேன்கள். பெளலர்களில் மார்க் வுட், ஹர்பஜன் சிங், லயம் ப்ளெங்கெட் என மூவரும் இருந்தார்கள். ஆனால், நேற்றிரவு 2021 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் மார்க் வுட்.

ஷகிப் அல்ஹசன்

விக்கெட் கீப்பரில் இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் 2 கோடி ஆரம்பவிலையில் இருக்கிறார்.

ஆல்ரவுண்டர்களில் ஷகிப் அல் ஹஸன், மொயின் அலி, கேதர் ஜாதவ், கிளென் மேக்ஸ்வெல் என நான்கு வீரர்கள் 2 கோடி ரூபாய் விலைப்பட்டியலில் இருக்கிறார்கள்.

கெத்துகாட்டும் பஞ்சாப் கிங்ஸ்

எப்போதும்போல அதிகப்பணத்துடன் களமிறங்குகிறது பஞ்சாப். 53 கோடியே 20 லட்சம் ரூபாய் அவர்களிடம் இருக்கிறது. பஞ்சாப் 5 வெளிநாட்டு வீரர்களை இன்றைய ஏலத்தில் எடுக்கலாம். 4 இந்திய வீரர்களை எடுக்கலாம். டேவிட் மாலனை ப்ரீத்தி ஜிந்தா டார்கெட் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஷகிப் அல் ஹஸனையும் பஞ்சாப் டார்கெட் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்!

37 கோடியே 85 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறது ராஜஸ்தான். இவர்கள் இன்றைய ஏலத்தில் 9 வீரர்களை எடுக்கவேண்டும். 3 வெளிநாட்டு வீரர்களை அவர்கள் எடுக்கலாம்.

முதல் வீரர் கருண் நாயர்  

முதல் வீரராக அறிவிக்கப்பட்ட கருண் நாயர் அன்சோல்ட்

அலெக்ஸ் ஹேல்ஸ் அன்சோல்ட்

ஜேசன் ராய் அன் சோல்ட்

ஸ்டீவ் ஸ்மித்தை 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்.

மேற்கு இந்திய வீரர் எவின் லூயிஸ் அன்சோல்ட்

ஆரோன் ஃபின்ச் அன்சோல்ட்

ஹனுமா விஹாரி அன்சோல்ட்

14 கோடி 25 லட்சம் ... கிளென் மேக்ஸ்வெல்லை வாங்கிய பெங்களூரு!

கிளென் மேக்ஸ்வெல்
கிளென் மேக்ஸ்வெல்

2 கோடி ரூபாயில் தொடங்கிய கிளென் மேக்ஸ்வெல்லுக்கான ஏலம் பெங்களூரு, சென்னைக்கு இடையே கடுமையாக நடந்தது. இறுதியில் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

கேதர் ஜாதவ் அன்சோல்ட்

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது.

மொயின் அலியை வாங்கியது சிஎஸ்கே

மொயின் அலி
மொயின் அலி

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை 7 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே

ஷிவம் துபே
ஷிவம் துபே
bcci

4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஷிவம் துபேவை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்

 16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸ்

16.50 கோடி காலி... ஸ்பின்னர்கள் மொயின் அலி, கிருஷ்ணப்ப கெளதமை வாங்கிய சிஎஸ்கே! #IPLAuction

கிறிஸ் மோரிஸை வாங்க மும்பை இந்தியன்ஸுக்கும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் இடையே கடும்போட்டி நடந்தது. 12 கோடியைத் தாண்டும்போது மும்பை பின்வாங்க, பிரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகத் தொகைக்கு விற்பனையான வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் கிறிஸ் மோரிஸ்.

1.50 கோடிக்கு டேவிட் மாலன்!

16.50 கோடி காலி... ஸ்பின்னர்கள் மொயின் அலி, கிருஷ்ணப்ப கெளதமை வாங்கிய சிஎஸ்கே! #IPLAuction

அதிக விலைக்குப் போவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலனை 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்!

தோனியோடு விளையாடுவது சந்தோஷம்!

16.50 கோடி காலி... ஸ்பின்னர்கள் மொயின் அலி, கிருஷ்ணப்ப கெளதமை வாங்கிய சிஎஸ்கே! #IPLAuction

7 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி எனப் பேட்டியளித்திருக்கிறார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி. ''தோனி தலைமையில் விளையாடுவதில் மிகுந்த சந்தோஷம். என்னுடைய சக நாட்டு வீரர் சாம் கரணும் சென்னையில் இருக்கிறார். சூப்பர் கிங்ஸுக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார் மொயின்.

நியூஸிலாந்தின் கிளென் ஃபிலிப்ஸ் அன்சோல்ட்!

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி அன்சோல்ட்!

சாம் பில்லிங்ஸ்
சாம் பில்லிங்ஸ்

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் அன்சோல்ட்!

இலங்கையின் குஸல் பெரேரா அன்சோல்ட்!

ஆடம் மில்னி
ஆடம் மில்னி

நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஆடம் மில்னியை 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்!

முஸ்தஃபைசுர் ரஹ்மான்
முஸ்தஃபைசுர் ரஹ்மான்
AP

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபைசுர் ரஹ்மானை 1 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஜை ரிச்சர்ட்சன்
ஜை ரிச்சர்ட்சன்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை வாங்க கடும்போட்டி நடந்தது. இறுதியில் 14 கோடிக்கு ஜை ரிச்சர்ட்சனை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

நாதன் கூல்ட்டர் நைல்
நாதன் கூல்ட்டர் நைல்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கூல்ட்ர் நைலை 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

ஷெல்டன் காட்ரெல் அன்சோல்ட்!

உமேஷ் யாதவை 1 கோடிக்கு எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்!

இங்கிலாந்து ஸ்பின்னர் ஆதில் ரஷித் அன்சோல்ட்!

ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் முஜிப் உர் ரஹ்மான் அன்சோல்ட்!

ஹர்பஜன்சிங் அன்சோல்ட்

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்ட ஹர்பஜன் சிங்கை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

நியூஸிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதி அன்சோல்ட்!

பியூஷ் சாவ்லா
பியூஷ் சாவ்லா

சென்னையில் இருந்து விடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லாவை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது மும்பை இந்தியன்ஸ்!

''கிறிஸ் மோரிஸுக்கான விலை அதிகம்தான்...ஆனால்'' - குமார சங்கக்காரா!

கிறிஸ் மோரிஸ்
கிறிஸ் மோரிஸ்

16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை எடுத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். '' விலை அதிகம்தான். ஆனால், கிறிஸ் மோரிஸின் ரோல் அணியில் மிக முக்கியமானது. ஐபிஎல் தொடர்களிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதனால்தான் அவரை போட்டிபோட்டு எடுத்தோம்'' என்று சொல்லியிருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸின் கிரிக்கெட் இயக்குநரான குமார சங்கக்காரா!

தமிழக வீரர் ஹரி நிஷாந்தை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஆல் ரவுண்டரான கேரளாவின் சச்சின் பேபியை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது பெங்களூரு.

ஷாருக்கான்
ஷாருக்கான்

தமிழக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், ஆல்ரவுண்டருமான ஷாருக்கானை 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். 20 லட்சம் விலையில் ஆரம்பித்த இவரை ஏலத்தில் எடுக்கப் பல அணிகள் போட்டிபோட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடினார் ஷாருக்கான்.

கிருஷ்ணப்ப கெளதம், தோனி
கிருஷ்ணப்ப கெளதம், தோனி

கர்நாடக ஸ்பின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்ப கெளதமை 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ரிலி மெரிடித்
ரிலி மெரிடித்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலி மெரிடித்தை 8 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ். சமீபத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக பிக்பேஷ் லீகில் மிகச்சிறப்பாக விளையாடினார் மெரிடித்.

மணிமாறன் சித்தார்த்
மணிமாறன் சித்தார்த்

தமிழக ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த்தை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்.

ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் அன்சோல்ட்!

நியூஸிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் அன்சோல்ட்!

16.50 கோடி காலி... ஸ்பின்னர்கள் மொயின் அலி, கிருஷ்ணப்ப கெளதமை வாங்கிய சிஎஸ்கே! #IPLAuction

சென்னையில் புஜாரா!

புஜாரா
புஜாரா

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான செத்தேஷ்வர் புஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது சிஎஸ்கே.

15 கோடிக்கு கைல் கேமிசன்!

கைல் ஜேமிசன்
கைல் ஜேமிசன்

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை வாங்க கடுமையானப் போட்டி நிலவியது. பெங்களூருவுக்கும், பஞ்சாபுக்கும் இடையிலான போட்டாபோட்டியில் இறுதியில் பெங்களூரு அணி 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

காவ்யா கலாநிதி மாறன்
காவ்யா கலாநிதி மாறன்
டாம் கரண்
டாம் கரண்

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டாம் கரணை 5.25 கோடிக்கு வாங்கியிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ்!

16.50 கோடி காலி... ஸ்பின்னர்கள் மொயின் அலி, கிருஷ்ணப்ப கெளதமை வாங்கிய சிஎஸ்கே! #IPLAuction

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மோய்சஸ் ஹென்ரிக்ஸை 4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்.

4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியனை ஏலத்தில் எடுத்தது பெங்களூரு!