Published:Updated:

அஷ்வின் செய்த மன்கட் விக்கெட் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும்..? - காரணம் `கொரோனா’

அஷ்வின்
அஷ்வின்

அஷ்வின் மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்க வைக்க, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதம் கிளம்பியது.

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நேற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் அடுத்த 21 நாள்கள் லாக்-டவுனில் இருக்கும் என் அறிவித்தார். அதைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் விளையாட்டுப் பிரபலங்களும் சமூக வலைதளம் மூலம் மக்களை வீட்டிலே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

கொரோனா
கொரோனா
AP

நெட்டிசன்களும் தங்களின் பங்குக்கு தொடர்ச்சியாக மீம்ஸ்கள் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். வீட்டிலே இருக்கும் சூழலில் மொபைலில் வந்துவிழும் இதுபோன்ற நகைச்சுவை கலந்த விழுப்புணர்வு விஷயங்கள் இந்தக் கடுமையான காலகட்டத்திலும் நம்மை கொஞ்சம் லேசாக உணரச் செய்கிறது. எல்லாப் பதிவுகளும் சொல்வது ஒன்றைத்தான், எந்தக் காரணம் கொண்டும் அலட்சியம் வேண்டாம் என்பதைத்தான்.

'Formula One' - அடுத்த 21 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி! #21dayslockdown

கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரில் பெரும் விவாதம் ஒன்று கிளம்பியது. அஷ்வின் மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்க வைக்க, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதம் கிளம்பியது. `பௌலர் தனது பந்து வீசும் ஆக்‌ஷனை செய்யும்போது, non-striker பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியில் இருந்தால், பௌலர் அவரை அவுட் செய்துகொள்ளலாம்’ என்பது ஐசிசியின் விதி. இதை மன்கட் முறை அவுட் என்கிறார்கள்.

அஷ்வின்  - கொரோனா மீம்ஸ்
அஷ்வின் - கொரோனா மீம்ஸ்

இந்த முறையில் அவுட் செய்ததற்குக் கடுமையான விமர்சனங்களை அஷ்வின் எதிர்கொண்டார். எனினும் ஐசிசி விதியில் இருக்கும் ஒரு முறையில்தான், நான் செயல்பட்டேன் என விளக்கமும் அளித்தார். ``நான் திட்டமிட்டு இப்படிச் செய்யவில்லை. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் செய்த செயல், ஐசிசி விதிகளில் உள்ளதுதான். விளையாட்டின் ஆற்றலைக் குறைக்கும் வகையில் நான் செயல்பட மாட்டேன். விதிகளில் என்ன உள்ளதோ அதைத்தான் செய்தேன்” என்றார்.

இத்தாலி முதல் இந்தியா வரை.. குறையாத கொரோனா வீரியம்..! -  `இன்று, நேற்று’ ஒப்பீடு

எல்லாம் சரி... இதையெல்லாம் இப்போது பேச வேண்டிய காரணம் என்ன? சம்பவம் இருக்கு...

மன்கட் முறையில் அஷ்வின், பட்லரை ஆட்டமிழக்கச் செய்தது இதே மார்ச் மாதம் 25-ம் தேதி, 2019. சரியாக ஒரு வருடத்தில் இந்தியாவில் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டையும் தொடர்புபடுத்தி வீட்டிலே மக்கள் இருக்க வேண்டும் என்று மீம்ஸ்கள் பறந்தன.

அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த அஷ்வின், ``ஒருவர் இந்தப் புகைப்படத்தை எனக்கு பகிர்ந்து, இந்தச் சம்பவம் நடைபெற்று இன்றோடு ஓராண்டு ஆகிறது என்றார். இந்த தேசம் இன்று முதல் லாக்- டவுனுக்குள் செல்வதால், நாட்டு மக்களுக்கு இது ஒன்றை நினைவூட்டும்... வெளியேறாதீர்கள்... உள்ளேயே இருங்கள்.. பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்றார்.

முன்னதாக அஷ்வின் தனது ட்விட்டர் கணக்கை, ``lets stay indoors India” என விழிப்புணர்வுக்காக மாற்றியது குறிப்பிடத்தக்கது!

அடுத்த கட்டுரைக்கு