Published:Updated:

தோனி - யுவராஜ் சிங் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

தோனி - யுவராஜ் சிங்
News
தோனி - யுவராஜ் சிங்

இதனைத் தொடர்ந்து, யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஜாம்பவான்களான தோனியும் யுவராஜ் சிங் இருவரும் வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பிறகு, யுவராஜ் சிங், ஒரு வீடியோ பதிவினை அப்லோட் செய்துள்ளார். அப்பதிவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கப்போவதாக குறிப்பிடிருந்தார், அப்பதிவின் இறுதியில் ஒருவரின் கை யுவராஜ் சிங் வீட்டின் கதவை தட்டுவது போல் காட்சி அமைந்திருந்தது, அது தோனியாக இருக்குமோ என்கிற கேள்வி ரசிகர்களிடயே எழுந்துள்ளது. இந்த சந்திப்பு, தோனியும் யுவராஜ் இணைந்து தொடங்கும் தொழில் தொடர்பாக இருக்கலாம், அவர்கள் இணைந்து தொடங்கும் பயிற்சி மைதானம் தொடர்பாக இருக்கலாம் என்று சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

யுவராஜ் சிங் - தோனி
யுவராஜ் சிங் - தோனி

மேலும், யுவராஜ் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்கப் போகிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்களிடயே எழுந்துள்ளது. BCCI யில், இந்தியா அணியின் ஓய்விற்கு பிறகு,வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்றால் ஐபில் போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாட இயலாது என்கிற விதியுள்ளது. ஆரம்ப காலத்திலிருந்து, தோனி யுவராஜ் சிங்கை குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும், அவர்களின் நட்பு இன்றும் தொடர்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz