Published:Updated:

IND vs NZ| ஷ்ரேயஸ்-ஜடேஜா கூட்டணியின் அசத்தல் தொடருமா?

அதிலும் அஜாஸ் படேல் ஷ்ரேயஸுக்கு வெறுமனே லெக் சைடில் டிஃபன்ஸிவ் லைனில் மட்டுமே வீசி கொண்டிருக்க நடுவர் அழைத்து எச்சர்த்த பின்னரே பந்தை நேராக வீசினார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட ஓர் இளம் பேட்டிங் படையை கொண்டு களமிறங்கியது. பல வருடங்களாக ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த ஷ்ரேயஸ் ஐயர் இப்போட்டியின் மூலமாக தனது முதல் சர்வதேச டெஸ்டில் களம் கண்டார். இரு பேஸர்களோடும் அஸ்வின், ரவி ஜடேஜா, அக்சர் படேல் என மூன்று ஸ்பின்னர்களோடும் களமிறங்கியது இந்திய அணி. மறுபக்கம் இரண்டு மெயின் ஸ்பின்னர்களுடன் மட்டுமே களமிறங்கியது வில்லியம்ஸன் தலைமையிலான நியூசிலாந்து அணி.

IND vs NZ
IND vs NZ
AP

முன்னதாக டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்லும் ஒப்பனர்களாக களமிறங்க டிம் சௌதியும் கைல் ஜெமிசனும் முதல் ஸ்பெல்லை வீசினர். இந்திய ஆடுகளங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் தொடக்க ஓவர்கள் சிலவற்றை வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு முடித்துவிட்டு பின்னர் ஸ்பின்னர்களை கொண்டு முழுமையான தாக்குதல் நடத்துவதே அணிகளின் பொதுவான திட்டமாக இருக்கும். பவுன்சருக்கோ ஸ்விங்கிற்கோ எந்தவகையிலும் உதவாத இந்த ஆடுகளங்களில் ஸ்பின்னர்களை கொண்டே இந்திய அணி தனது பௌலிங் அட்டாக்கைத் தொடங்கிய சமீபத்திய போட்டிகள் பலவுண்டு.

நியூசிலாந்து
நியூசிலாந்து
ஆனால் இன்றைய முதல் செஷ்ஷனில் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் நியூசிலாந்தின் இரு வேகப்பந்துவீச்சாளர்களும் பந்தை நன்றாக ஸ்விங் செய்தனர். அதிலும் கைல் ஜேமிசன் தனது உயரத்தின் உதவியால் பந்தை ஸ்விங் செய்தது மட்டுமின்றி அடிக்கடி பவுன்சர்களையும் வீசினார்.

ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்த அகர்வால் ஆட்டத்தின் ஏழாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை ஜேமிசனிடம் பறிகொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா- கில் கூட்டணி நன்றாவே விளையாடியது. முதல் செஷ்ஷன் முடிவில் இந்திய அணி 82 ரன்கள் குவித்திருந்தது. ஆனால் இரண்டாவது செஷ்ஷனின் முதல் ஓவரிலேயே அரைசதம் கடந்திருந்த கில்லின் ஸ்டெம்புகளை வீழ்த்தினார் ஜேமிசன். அடுத்த சில ஓவர்களிலேயே 26 ரன்கள் குவித்த புஜாராவும் சௌதி பந்தில் கீப்பரிடம் கேட்சாகி பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் ஷ்ரேயஸ் ஐயர். 2019 இரானி கோப்பைக்கு பிறகு ஷ்ரேயஸ் வெள்ளை ஜெர்சி அணிவது இதுவே முதல்முறை. தொடக்கத்தில் சற்று பதற்றமாக காணப்பட்டாலும் பின்னர் நியூசிலாந்து பௌலர்களை சிறப்பாகவே சமாளித்தார் ஷ்ரேயஸ்.

IND vs NZ
IND vs NZ

இன்னிங்ஸின் 50ஆவது ஓவரை வீசிய ஜேமிசன் முதல் பந்தை லெக் திசையில் காலுக்கு வீச அதை கேப்டன் ரஹானே க்ளான்ஸ் செய்ய பந்து கீப்பரின் கைகளுக்கு சென்றது. விக்கெட்டிற்காக நியூசிலாந்து வீரர்கள் அப்பீல் செய்ய நடுவர் நித்தின் மேனனும் கையை உயர்த்தினார். ஆனால் ரிவியூவில் தப்பித்த ரஹானே அதற்கடுத்த பந்திலேயே இன்ஸைட் எட்ஜாகி ஸ்டெம்புகளை பறிகொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அணியின் ஸ்கோர் 145-4. அப்போது இந்திய அணிக்கு மிகவும் அவசிய தேவையாக இருந்தது ஒரு பெரிய பார்ட்னர்ஷிப். அதை அடுத்து வந்து ஜடேஜாவுடன் சேர்ந்து மிக சிறப்பாக கட்டமைத்தார் ஷ்ரேயஸ். பொதுவாக அக்ரஸிவ் பேட்டிங் ஆடும் அவர் இன்று தனது இன்னிங்க்ஸை கட்டமைத்த விதம் அபாரமாய் இருந்தது. இரண்டாவது செஷ்ஷன் முடிவில் 55 பந்துகள் ஆடி 17 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஷ்ரேயஸ் கடைசி செஷ்ஷனில் தனது கியரை மாற்றி அடுத்த 81 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.

IND vs NZ
IND vs NZ

70 ஓவர்களுக்கு பிறகு நியூசிலாந்து பௌலர்களுக்கு ஆடுகளம் துளியும் உதவாமல் போக நியூபாலையாவது விரைவாக எடுப்போம் என ஏற்கனவே எடுபடாமல் போன ஸ்பின்னர்களை மீண்டும் அழைத்தார் வில்லியம்சன். அவர்களும் கடமைக்கென வீச இந்திய பேட்டர்கள் அதை நன்றாக பயன்படுத்தி பார்ட்னர்ஷிப்பில் சதத்தை நிறைவுசெய்தனர். அதிலும் அஜாஸ் படேல் ஷ்ரேயஸுக்கு வெறுமனே லெக் சைடில் டிஃபன்ஸிவ் லைனில் மட்டுமே வீசி கொண்டிருக்க நடுவர் அழைத்து எச்சர்த்த பின்னரே பந்தை நேராக வீசினார். ஆட்டநேர முடிவில் ஷ்ரேயஸ் 75 ரன்களுடனும் ஜடேஜா அரை சதத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

IND vs NZ
IND vs NZ

இன்றைய தினம் போலவே நாளையும் தொடக்க ஓவர் ஸ்விங்கை பேட்டர்கள் சமாளித்துவிட்டால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை நிச்சயம் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு