Published:Updated:

Dhoni: `அன்புடன் தோனி!' - ஒரு மனிதனும் கோடி ரசிகர்களும்! - ஒரு சேப்பாக்க அனுபவம்

IPL - MS Dhoni

ஒட்டுமொத்த மைதானமும் துள்ளி எழ ஒவ்வொரு கைபேசியும் தீபமாய் ஒளிர விண்ணை தாண்டி ஆர்பரிக்கும் கரகோஷத்துக்கு மத்தியில் பிட்சை நோக்கி ஓர் அரசனை ஒத்த நடைபோடுவார் அந்த ஏழாம் நம்பர் ஜெர்சிக்காரர்.

Published:Updated:

Dhoni: `அன்புடன் தோனி!' - ஒரு மனிதனும் கோடி ரசிகர்களும்! - ஒரு சேப்பாக்க அனுபவம்

ஒட்டுமொத்த மைதானமும் துள்ளி எழ ஒவ்வொரு கைபேசியும் தீபமாய் ஒளிர விண்ணை தாண்டி ஆர்பரிக்கும் கரகோஷத்துக்கு மத்தியில் பிட்சை நோக்கி ஓர் அரசனை ஒத்த நடைபோடுவார் அந்த ஏழாம் நம்பர் ஜெர்சிக்காரர்.

IPL - MS Dhoni
சென்னை அணி மோதும் போட்டிகளில் களத்தில் சென்னை அணிக்கும் இன்னொரு அணிக்கும் நடக்கும் போட்டியை கடந்து பவுண்டரி லைனுக்கு வெளியே இன்னொரு சுவாரஸ்யப் போட்டி ஒன்று நடக்கும்.

அது அந்த மைதானத்தில் மஞ்சள் கூட்டமாக அலைகடலென திரண்டிருக்கும் ரசிகர் கூட்டத்துக்கும் பாடல்களை ஒலிபரப்பி அரங்கை அதிர செய்யக் கூடியிருக்கும் DJ மற்றும் குழுவினருக்கும் இடையே நடைபெறும் போட்டிதான். தோனி களத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் போது யார் அதிக ஸ்ருதியில் தோனிக்கு ஆராவாரம் செய்கிறார்கள் என்பதே இவர்களுக்கிடையில் நடக்கும் போட்டி. பல சமயங்களில் அத்தனை ஸ்பீக்கர்களும் எழுப்பும் ஒலியை விடவும் ரசிகர்கள் எழுப்பும் ஆராவாரம் அதிகம். ஒரு போட்டோ கூட வைரலானதே! 

Dhoni
Dhoni

தோனி களமிறங்கும் போது ஸ்மார்ட் வாட்ச்சில் டெசிபல் கணக்கை பார்க்கையில், இந்த சத்தம் உங்களின் செவிக்கு சேதாரத்தை விளைவிக்கக்கூடும் என காட்டப்பட்டிருக்குமே. அதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. தோனி களமிறங்கும் போது ஒவ்வொரு போட்டியிலுமே மைதானத்தில் அதுதான் நடக்கும். ஆனால், அதை ஒரு இரைச்சலாக நம்மால் எண்ணவே முடியாது. தோனியின் மீதான பேரன்பை பெருக்கெடுத்து ஓடச் செய்யும் நிகழ்வாகவே இது தோன்றும்.

`நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருக்கும்பட்சத்தில் ஒரு முறையாவது மைதானத்திற்கு வந்து தோனியின் வருகையை நேரில் காண வேண்டும். அது ஒரு பேரனுபவம்.' ஐ.பி.எல் க்கு கமென்ட்ரி செய்ய வந்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் தோனியின் என்ட்ரியும் அதற்கான ரசிகர்களின் ஆராவாரத்தையும் பற்றி இப்படி பேசியிருந்தார்.

Dhoni
Dhoni

மற்ற எந்த ரசிகர் கூட்டத்தையும் போலல்லாமல், சென்னை அணியின் மஞ்சள் படை ஒரு வினோதமான போக்கை மிக உக்கிரமாக கடைபிடித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட் செய்யும் இன்னிங்ஸ் 15 ஓவரையோ அல்லது அணியின் விக்கெட் எண்ணிக்கை ஐந்தையோ கடந்துவிட்டால் அடுத்த சில ஓவர்களுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிரணியின் ஆதரவாளர்களாகிவிடுகின்றனர். 

அந்த குறிப்பிட்ட சில ஓவர்களில் சிஎஸ்கே-வின் பேட்டர்கள் என்னதான் தொடர் சிக்ஸர்களை அடித்து ரன்களை வாரி குவித்தாலும் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வேறு ஒன்றே. அதை கவுன்ட்-டவுனாக முதலில் எண்ணத் தொடங்கி ஒரு கட்டத்தில் ‘We want Wicket’ என எதிரணி பௌலர்களிடம் வெளிப்படையாகவே கூச்சலிட்டு கேட்கத் தொடங்குகிறது மஞ்சள் படை.

இல்லையெனில், 'We want Dhoni...we want Dhoni...' என ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதற்கேற்ப களத்திலிருக்கும் பேட்டர் தன் விக்கெட்டை எவ்வளவு விரைவாக எதிரணி பந்துவீச்சாளரிடம் இழக்கிறாரோ, அவருக்கு அத்தனை பெரிய ராஜ மரியாதை நிச்சயம் உண்டு. ஜடேஜாவே இதைப்பற்றி டெல்லிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசியிருந்தாரே, 'நான் 7 வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் போது ரசிகர்கள் ஏமாற்றமடைந்து தோனி... தோனி... என ஆராவாரம் செய்கிறார்கள். நான் அவுட் ஆகினால் தோனியின் வருகைக்காக ஆர்ப்பரிக்கிறார்கள்.' என ஜாலியாக வேதனைப்பட்டிருந்தார் ஜடேஜா. Rayudu also deal the same problem. மும்பைக்கு எதிரான போட்டியில் தோனியை நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் வைத்துவிட்டு 8 ரன்கள் வேண்டும் என்ற சூழலில் சிக்சர் அடித்த துபே, சேப்பாக்கத்தில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் ஒரே நொடியில் பகையாளி ஆகிப்போனார். எழுத்தில் குறிப்பிடமுடியாத வார்த்தைகளால் துபேவுக்கு பல ரசிகர்களும் அர்ச்சனை செய்தனர். கடைசியாக தோனி வின்னிங் சிங்கிளை தட்டியவுடன்தான் அந்த மஞ்சள் படை ஆசுவாசமடைந்தது.

Dhoni
Dhoni

இதுதான் என் கடைசி சீசன் என்றோ இத்தொடரோடு விடைபெறப்போகிறேன் என்றோ அவர் எந்த ஓர் இடத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடவில்லை. ஆனால், எங்கே அப்படி ஏதும் ஒன்று உண்மையில் நடந்துவிடமோ என்பதே மைதானங்களை நோக்கிய இந்த பெரும் படையெடுப்புக்களுக்கான காரணம். வெற்றி தோல்வி என்ற ஒன்றை இக்கூட்டம் மறந்து வெகு நாளாகிவிட்டது. கடைசி ஓவரின் கடைசி பந்தாகக்கூட இருக்கட்டும், அவர் பேட் செய்யும் ஒரே ஒரு பந்தை பார்த்துவிட்டால் போதும் என்பதே பெரும்பாலோரின் தற்போதைய மனநிலை. தங்கள் சொந்த அணி பேட்டரையே விக்கெட் இழக்க சொல்லி கேட்பதெல்லாம் இதற்காகத்தான்.

சென்னை ரசிகர்களுக்கு சென்னை ஆடும் போட்டிகளின் மொத்த ஆட்ட நேரம் வெறும் நான்கரை நிமிடங்கள்தான்.  டெத் ஓவரில் ஜடேஜா/துபே/ ராயுடு தூக்கி அடிக்கும் பந்து ஃபீல்டரின் கைகளில் தஞ்சம் அடைந்த அந்த நொடி.

Freeze…

ஒட்டுமொத்த மைதானமும் துள்ளி எழ ஒவ்வொரு கைபேசியும் தீபமாய் ஒளிர விண்ணைத் தாண்டி ஆர்பபரிக்கும் கரகோஷத்துக்கும் மத்தியில் பிட்சை நோக்கி ஓர் அரசனை ஒத்த நடைபோடுவார் அந்த ஏழாம் நம்பர் ஜெர்சிக்காரர். அந்த சில மணித்துளிகளின் மாயாஜாலத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது. நேரில் அனுபவித்தவர்கள் மட்டுமே அதற்கு சாட்சி. ஒவ்வொரு போட்டியிலுமே இந்த வரவேற்பு சம்பிரதாயங்கள் அனைத்தும் மேலே குறிப்பிட்டவையின் காப்பி பேஸ்ட் தான்.

Dhoni
Dhoni

சொந்த மைதானங்களில் கிடைக்கும் இந்த ஆதரவு வழக்கமான ஒன்றுதானே என்று சிலர் கேட்கலாம். ஆம், இதில் என்ன சிறப்பிருக்கிறது. ஆனால், தான் செல்லும் இடங்கள் அனைத்தையும் மஞ்சள் மயமாக்கி வருகிறாரே இந்த மனிதர். மும்பை, பெங்களூரு அணிகளை அவர்களிடத்தில் வைத்து இதற்குமுன்னர் பலமுறை வீழ்த்தியிருக்கிறது சென்னை. ஆனால், வெற்றியைத் தாண்டிய இந்த இரு பெருந்தலைகளின் மைதானங்களை இம்முறை சி.எஸ்.கே-வின் ஹோம் கேம்களாக மாற்றியதில் வாயடைத்து போயினர் அதன் சொந்தக்காரர்கள். 

இந்த எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் ஏற்ப, கடந்த நான்காண்டு காலத்தில் இல்லாத ஓர் அற்புத ஃபார்மை அவரிடம் இப்போது காணமுடிகிறது. 151 கி.மீ வேகத்தில் வீசப்படும் ஷார்ட் பாலை மிடிலில் வாங்கி ஸ்கொயரில் சிக்ஸ்க்கு புல் செய்வது, 50-க்கும் அதிகமான ரன்கள் தேவைப்படும் கடைசி மூன்று ஓவர்களை ஆட்டத்தின் இறுதிப் பந்து வரை எடுத்துச்செல்வது, மைக்ரோ நொடிகளில் பெயில்களை தகர்ப்பது என கடந்த தசாப்தத்தின் முற்பகுதியிலேயே தங்கிவிட்டார் அந்த 41 வயதுக்காரர்.

Dhoni
Dhoni

சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியின் தோனியின் என்ட்ரியின்போது `Last Over is Thala's Territory' என ஸ்லோகன் போட்டார்கள். சேப்பாக்கத்தில் மட்டுமில்லை. எந்த மைதானத்தில் என்றாலும் இந்த சீசனை பொறுத்தவரை கடைசி ஓவர் தோனியின் டெரிட்டரியாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னதான் சொன்னாலும் சேப்பாக்கத்தில் DJ வால் ஒலிபரப்பப்படும் தமிழ் பாடல்களும் அதற்கு தோனியின் மாஸான வருகையும் எப்போதுமே கூடுதல் ஸ்பெசல்தான். `என் ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா...தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே...' இந்த படையப்பா பின்னணி பாடலுடன் தோனி களத்தில் இறங்கியதெல்லாம் என்ன சொல்ல… ஃபின்ச் சொன்னது போல அது ஒரு பேரனுபவம்!