Published:Updated:

`நான் கூல்;அவர் கோபக்காரர்'- தமிழ்ப் பெண் வினி ராமனை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல் - வினி ராமன்

மேக்ஸ்வெல்- வினி தம்பதியின் திருமண நிகழ்வு இருவரின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனிப்பட்ட முறையில் நடந்து முடிந்தது.

`நான் கூல்;அவர் கோபக்காரர்'- தமிழ்ப் பெண் வினி ராமனை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்- வினி தம்பதியின் திருமண நிகழ்வு இருவரின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனிப்பட்ட முறையில் நடந்து முடிந்தது.

Published:Updated:
மேக்ஸ்வெல் - வினி ராமன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலியான வினி ராமனை 18 மார்ச் 2022 கடந்த வெள்ளிக்கிழமை திருணம் செய்திருக்கிறார். மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். வினி ராமன் ஒரு மருத்துவ அறிவியல் பட்டதாரி. பார்மசிஸ்ட் ஆகப் பணிபுரியும் வினி, 2013-ல் நடந்த மெல்பன் ஸ்டார் ஈவன்ட்டில் மேக்ஸ்வெல்லை முதன்முதலில் சந்தித்தார். மேக்ஸ் தான் தனது காதலை முதன்முதலில் தெரிவித்தாராம். 2017-ல் இருந்து டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடிக்கு 2020-ல் நிச்சயதார்த்தம் முடிந்தது‌. கொரோனா காரணமாக திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெறபோவதாக பெண் வீட்டார் சார்பில் தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பத்திரிகை ஒன்று வெளியானது. அதில் அதில் மேக்ஸ்வெல் வினி தம்பதியினருக்கு மார்ச் 27 அன்று திருமணம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.மேக்ஸ்வெல்- வினி தம்பதியின் திருமண நிகழ்வு இருவரின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனிப்பட்ட முறையில் நடந்து முடிந்தது.

மேக்ஸ்வெல் - வினி ராமன்
மேக்ஸ்வெல் - வினி ராமன்

வினி ராமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாக்ஸ்வல் எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இருவரும் திருமண உடைகளில் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கிளிக் செய்த அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேக்ஸ் வினியை விட வயதிலும் உயரத்திலும் பெரியவர்.முன்னதாக,மாக்ஸ்வெல் மிகவும் கோபக்காரர் தான் மிகவும் சென்சிடிவ் டைப் என வினி ராமன் ஒருமுறை கூறியிருந்தார். நீரும் நெருப்பும் போல குணம் படைத்த இந்த தம்பதியினருக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்த்து மலர்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism