Published:Updated:

INDvSA: அற்புதம் நிகழ்த்திய அர்ஷ்தீப்; திணறிப்போன தென்னாப்பிரிக்கா; முதல் போட்டியை வென்றது இந்தியா!

Arshdeep |INDvSA ( BCCI )

அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவர் இன்னும் பயங்கரமாக இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியிருந்தார்.

Published:Updated:

INDvSA: அற்புதம் நிகழ்த்திய அர்ஷ்தீப்; திணறிப்போன தென்னாப்பிரிக்கா; முதல் போட்டியை வென்றது இந்தியா!

அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவர் இன்னும் பயங்கரமாக இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியிருந்தார்.

Arshdeep |INDvSA ( BCCI )
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி இந்தப் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தது. பெயருக்கேற்றவாறே பிட்ச்சிலும் வழக்கத்தைவிட அதிக புற்கள் நிரம்பியே காணப்பட்டது. பிட்ச் ரிப்போர்ட்டைக் கொடுத்த அஜித் அகர்கரும் எம்பாங்வாவும் நியூ பாலில் பௌலர்களுக்கு உதவக்கூடிய பிட்ச்சாக இருக்கும் என உத்தரவாதம் கொடுத்தனர். அதேபோன்றுதான் நடக்கவும் செய்தது.

டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸின் போது ரவிசாஸ்திரி ரோஹித் சர்மாவிடம்

Rohit |INDvSA
Rohit |INDvSA
ICC
'ரசிகர்களின் ஆராவாரத்தை பார்த்தீர்களா? இந்த சத்தத்தில் அவுட் ஃபீல்டில் நிற்கும் வீரர்களிடம் எப்படி தகவல்களை பரிமாறிக்கொள்ளப் போகிறீர்கள்?' ரவிசாஸ்திரி நகைச்சுவையாகத்தான் இந்த கேள்வியை கேட்டார். ஆனால், ரோஹித் & கோ இதை படு சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல!

அவுட் ஃபீல்டர்கள் நிற்கிற வரையெல்லாம் காத்திருக்க வேண்டும். பவர்ப்ளேக்குள்ளேயே மொத்தமாக முடித்துவிடலாம் என்ற மனநிலையில் தென்னாப்பிரிக்காவை பந்தாடி விட்டார்கள். முதல் மூன்று ஓவர்களுக்காகவே தென்னாப்பிரிக்க அணியின் டாப் 5 விக்கெட்டுகளை தீபக் சஹாரும் அர்ஷ்தீப் சிங்கும் வீழ்த்திவிட்டனர்.

புற்கள் நிரம்பிய அந்த பிட்சில் பந்து நன்றாகவே ஸ்விங் ஆனது. அதற்கேற்றவாறு ரோஹித்தும் தொடக்கத்திலிருந்து இரண்டு ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்தார். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்க கேப்டனான பவுமா வீழ்ந்தார். இரண்டு அவுட் ஸ்விங்கர்களுக்குப் பிறகு தீபக் சஹார் வீசிய ஒரு இன்ஸ்விங்கரில் பவுமா ஸ்டம்புகளைப் பறிகொடுத்து வெளியேறினார்.

Arshdeep
Arshdeep
BCCI
அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவர் இன்னும் பயங்கரமாக இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியிருந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஒரு பந்துக்கு பேட்டை விட்டு இன்சைட் எட்ஜ் ஆகி டீகாக் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். அடுத்ததாக ஒரு அவுட் ஸ்விங்கில் ரோசோவ் எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் ஆக, அதற்கடுத்த பந்தே ஒரு இன்ஸ்விங்கில் மில்லர் போல்டானார்.

சர்வதேச டி20 போட்டிகளில் மில்லரின் முதல் டக் அவுட் இதுதானாம்!

அற்புதமான ஓவரை வீசி விட்டு அர்ஷ்தீப் செல்ல, அடுத்த ஓவரில் சஹார் ஸ்டப்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். இப்படி தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டிருந்த சமயத்தில் கமென்ட்ரி பாக்ஸில்

வீழ்ந்த அத்தனை பேட்டர்களும் டி20 க்கே உரிய ஷாட்களை ஆடி அவுட் ஆகியிருக்கின்றனர். உடம்பிலிருந்து பேட்டை வெளியே விட்டு கொஞ்சம் அழுத்தமாக ஷாட் ஆட முற்பட்டனர்
கவாஸ்கர்

என கவாஸ்கர் பேசியிருந்தார். கவாஸ்கரைப் போலவே நமக்கும் கொஞ்ச நேரத்திலேயே இது டி20 போட்டிதான் என்பது மறந்தேவிட்டது. பேட்டர் லீவ் செய்தால் 'Well Left' என கைத்தட்டாதது ஒன்றுதான் குறை. தென்னாப்பிரிக்க அணி பவர்ப்ளேயில் 30 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். சீக்கிரமே ஆல் அவுட் ஆகிவிடுவார்கள் என நினைக்கையில் தென்னாப்பிரிக்க அணி கொஞ்சம் தாக்குப்பிடித்தது. மார்க்ரம், பர்னல், மகாராஜா ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 100 க்கு மேல் கொண்டு வந்துவிட்டனர். பவர்ப்ளேயில் சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங் 19 வது ஓவரில் 17 ரன்களை கொடுத்திருந்தார். 19 வது ஓவர் என்றாலே இந்தியாவிற்கு அலர்ஜிதான்!

Rahul & SKY
Rahul & SKY
BCCI

107 ரன்கள் டார்கெட்டை எட்டிப்பிடிக்க இந்திய அணி களமிறங்கியது. ரபாடா வீசிய முதல் ஓவரை முழுமையாக டாட் ஆடி மெய்டனாக்கிவிட்டார் ராகுல். பந்து மூவ் ஆவதால் தென்னாப்பிரிக்கவைப் போன்ற ஒரு அதிர்ச்சிமிக்க தொடக்கத்தை சந்தித்து விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது தெரிந்தது. இருந்தும் ரோஹித்தும் கோலியும் சீக்கிரமே விக்கெட்டை விட்டு ஏமாற்றம் அளித்தனர்.

பவர்ப்ளேயில் இந்திய அணி 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர் இதுதான்.

பவர்ப்ளே முடிந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் வந்தார். வந்த வேகத்திலேயே நோர்கியாவின் பந்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்பிறகுதான் இந்திய அணியின் ஸ்கோர் வேகம்பிடித்தது. ராகுல் ஒரு முனையில் தஞ்சமடைந்து விக்கெட்டை காக்க அதன்பிறகு இந்திய அணிக்கு விக்கெட் சேதாரம் இல்லை. 17 வது ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டிப்பிடித்தது. ராகுல், சூர்யகுமார் இருவருமே அரைசதத்தை கடந்திருந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு ரொம்பவே சுமாராக இருந்தது. பவர்ப்ளே, டெத் ஓவர் என எங்கேயும் சொதப்பல்தான்.

TEAM INDIA
TEAM INDIA
ICC
தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான இந்த முதல் போட்டியில் வென்றதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக பந்தும் வீசியிருக்கின்றனர். ஒரு பௌலர் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். இதுவே ஒரு சிறப்பான முன்னேற்றம்தான். இது தொடர வேண்டும்!