Published:Updated:

மீண்டும் சிக்கலில் ஷமி; விஸ்வரூபம் எடுக்கும் மனைவியின் புகார் - கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

ராம் பிரசாத்

இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

Mohammed Shami
Mohammed Shami

இந்தியக்கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் ஃபேஸ்புக்கில் பகீர் குற்றச்சாட்டை கிளப்பினார். ஷமியின் சொந்தப்பிரச்னை மனைவியின் ஃபேஸ்புக் பதிவால் வீதிக்கு வந்தது. ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் நேரம் செலவழிப்பதாகவும் இதுகுறித்து கேட்டால் தன்னை அடிக்கிறார். எனது மகளுக்காக தான் இத்தனை நாள்களாக நான் அமைதியாக இருந்தேன் என்றார். ஷமி சில பெண்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், ஃபேஸ்புக்கில் அவர் அனுப்பிய மெசேஜ்களையும் பதிவிட்டார்.

Mohammed Shami
Mohammed Shami

முதலில் இவை எல்லாம் பொய்யாக இருக்கும் ஷமியின் நற்பெயரை கெடுக்க இவ்வாறான வதந்திகள் பரவி வருவதாக ரசிகர்கள் எண்ணினர். ஷமியும்ஹசின் ஜகானும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். ஹசின் திருமணமானவர் முறையாக விவாகரத்து பெற்று ஷமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹசினின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணிய வேளையில் அவரே செய்தியாளர்களை சந்தித்தார். ஷமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை பதிவு செய்தார். ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார். இதன்காரணமாக 2018-ல் அவர் அணியில் விளையாடுவது சிக்கலானது. அவரது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பிசிசிஐ விசாரணைக்கு பின்னரே அவர் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

`அவரைக் கொன்று நன்றி தெரிவித்துவிட்டனர்’- ஓய்வுக்குபிறகும் சேவைசெய்த மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்!

இதனால் ஷமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனையடுத்து ஷமி மீதும் அவரது சகோதரர் மீது ஹசின் ஜகான் கொல்கத்தா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்கு தொடர்பாக ஷமி காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்து வந்தார். ஷமி மீது வரதட்சனை கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Mohammed Shami
Mohammed Shami

இந்நிலையில், ஹசின் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமது ஆகியோருக்கு எதிராக அலிப்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இருவரும் 15 நாள்களுக்குள் சரணடையுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.