Election bannerElection banner
Published:Updated:

`அழகான பனிப்பாறைகள்; காதல் மனைவியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்’ - நியூசிலாந்தில் விராட் கோலி

கோலி
கோலி

விராட் கோலி, அனுஷ்கா இருவரும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா இந்தப் புத்தாண்டை நியூசிலாந்தில் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட், படப்பிடிப்பு என இருவரும் பிஸியாக இருந்தாலும் ஓய்வு நேரங்களை ஒன்றாகவே செலவிடுகின்றனர். இந்தப் புத்தாண்டைக் கொண்டாட இருவரும் நியூசிலாந்து பயணமாகியுள்ளனர்.

சுற்றிலும் பனிப்பாறைகள் சூழ்நதிருக்க அந்த அழகான சூழலில் கோலியும் அனுஷ்காவும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ``அழகான பனிப்பாறைகளின் மீது நின்று உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்ல நினைத்தேன். 2019-ம் ஆண்டு உங்களுக்கு இனிதாக நிறைவடைந்திருக்கும் என நம்புகிறோம். 2020-ம் ஆண்டு இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளனர்.

இந்தக் காதல் தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் விராட் கோலியின் மற்றொரு ட்வீட்டர் பதிவு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது, ``சிறந்த புகைப்படக் கலைஞர் உங்கள் படம் எடுக்கும்போது உங்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படுவதில்லை” என அனுஷ்கா ஷர்மாவை டேக் செய்து காதல் வசனங்களை அள்ளித் தெளித்துள்ளார் நம்ம விராட் கோலி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு