Published:Updated:

கைகொடுக்காத டுப்ளெஸ்ஸியின் டாஸ் வியூகம்!- இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம் #Video

ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக டாஸை இழந்துள்ளார்.

toss
toss

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து, தொடரை இழந்தது. இந்தநிலையில், இறுதி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கைகொடுக்காத டுப்ளெஸ்ஸியின் டாஸ் வியூகம்!- இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம் #Video

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய அணியின் கேப்டன் கோலியே டாஸ் வென்றார். இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸிலேயே நல்ல ஸ்கோரை எட்டியது. ஆனால், அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.

இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு டாஸ் ஒரு முக்கியப் பங்காகக் கூறப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டுப்ளெஸ்ஸிஸ், ஆசிய மண்ணில் தொடர்ச்சியாக டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கிறார். அவர், ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக டாஸை இழந்துள்ளார். இதனால் தனக்கு டாஸ் ராசியில்லை எனக் கருதிய டுப்ளெஸ்ஸிஸ் இறுதிப்போட்டிக்கு சக வீரரான பவுமாவை டாஸ் போட அழைத்துவந்தார்.

கைகொடுக்காத டுப்ளெஸ்ஸியின் டாஸ் வியூகம்!- இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம் #Video

டாஸ் காயினை கோலி சுண்டிவிட, பவுமா பூவா தலையா கேட்டார். எப்படியாவது டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்துவிட வேண்டும் என்ற முனைப்பிலிருந்த டுப்ளெஸ்ஸிஸிக்கு இந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை. மீண்டும் டாஸ் வென்ற கோலி, மீண்டும் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்த நிகழ்வு மைதானத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது. கோலியும் டுப்ளெஸ்ஸிஸும் கூட சிரித்துக்கொண்டே இருந்தனர்.

இந்திய அணியின் இஷாந்த ஷர்மாவுக்குப் பதில் நதீம் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார். தென்னாப்பிரிக்கா அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஜார்ஜ் லிண்டே அறிமுக வீரராகக் களமிறங்குகிறார். இந்திய அணி தற்போது பேட்டிங் செய்துவருகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணி, மயங்க் அகர்வால் மற்றும் புஜாரா ஆகியோரது விக்கெட்டுகளை இழந்துள்ளது.