Published:Updated:

`ஹேர்டிரையர், ஸ்டீம் அயர்ன்; கோலி அதிருப்தி?' - சர்ச்சையால் பதறிய அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம்#INDvSL

விராட் கோலி

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாதநிலையில் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

`ஹேர்டிரையர், ஸ்டீம் அயர்ன்; கோலி அதிருப்தி?' - சர்ச்சையால் பதறிய அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம்#INDvSL

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாதநிலையில் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Published:Updated:
விராட் கோலி

அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். காயத்தால் ஓய்வில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணிக்குத் திரும்பிய நிலையில், ஜடேஜா மற்றும் சஹால் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல், இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் இடம்பிடிக்காத நிலையில், இளம்வீரர் பனுகா ராஜபக்சே, அறிமுக வீரராகக் களமிறங்குவார் எனக் கேப்டன் மலிங்கா தெரிவித்தார்.

விராட் கோலி
விராட் கோலி
AP

இந்தநிலையில், டாஸுக்குப் பின் மழை பெய்யத் தொடங்கியதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மழை ஓய்ந்த பின்னரும் ஆடுகளத்தில் ஈரப்பதம் மிகுந்து காணப்பட்டது. அப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி, ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் மைதானத்துக்குள் வந்து ஆடுகளத்தைப் பார்வையிட்டனர். ஆனால், ஈரப்பதம் குறையாததால் போட்டி தொடங்குவதில் சிக்கல் நீடித்தது. இதுகுறித்து கோலியும் அதிருப்தி அடைந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரவு 9.46 மணிக்குத் தொடங்கினால், குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் கொண்டதாகப் போட்டியை நடத்தலாம் என நடுவர்கள் நேரம் நிர்ணயித்திருந்தனர். இதனால், ஆடுகளத்தின் ஈரத்தன்மையைப் போக்க வேக்கும் ப்ளோயர், ஹேர் டிரையர், ஸ்டீம் அயர்ன் உள்ளிட்டவற்றை மைதான ஊழியர்கள் பயன்படுத்தினர். அதேநேரம், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள், ஆடல், பாடல் எனப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். மைதான ஊழியர்கள் முயன்றதுக்குப் பலன் கிடைக்கவில்லை. இதனால், போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் 9.30 மணிக்கு அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ஆடுகளத்தில் ஈரப்பதத்தைப் போக்கும் முயற்சியில் மைதான ஊழியர்கள்
ஆடுகளத்தில் ஈரப்பதத்தைப் போக்கும் முயற்சியில் மைதான ஊழியர்கள்

இந்தநிலையில், `ஆடுகளத்தின் ஈரத்தன்மையைப் போக்க தொழில்நுட்பரீதியில் எவ்வளவோ சாதனங்கள் வந்துவிட்டதாகவும் ஆனால், மைதான ஊழியர்கள் ஹேர் டிரையர் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தியது ஏன்?' எனக் கேட்டு அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்துக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். அதேபோல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே இந்தப் போட்டி கைவிடப்பட்டதாகவும் நெட்டிசன்கள் சிலர் குற்றம்சாட்டினர். மேலும், ஆடுகளத்தை மூடியிருந்த கவர்கள் தரம் குறைந்தவையாக இருந்தன என்ற புகாரும் எழுந்தது.

இந்தநிலையில், மழை காரணமாகத்தான் போட்டி கைவிடப்பட்டது. மாறாக, தங்கள் அலட்சியத்தால் அல்ல என அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கச் செயலாளர் தேவஜித் லோன் ஷைகியா, ``ஆடுகளத்தை மூடியிருந்த கவர்களில் ஏதேனும் பிரச்னை இருந்திருந்தால், முதலில் மழை பெய்தபோதே ஆடுகளம் சேதமாகியிருக்கும்.

கள நடுவர்கள்
கள நடுவர்கள்
AP

நேற்று இரவு 10 முதல் 11 மணி வரை மழை நீடித்தது. ஆனால், ஆடுகளத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால், ஏன் இப்படி ஒரு தவறான தகவல் பரவியது? அதை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை'' என்றார்.