Published:Updated:

Aaron Finch: "2024 உலகக்கோப்பையில் என்னால் ஆட முடியாது. அணியின் நலன் கருதி..." ஓய்வை அறிவித்த பின்ச்

ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டனான ஆரோன் பின்ச், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

Published:Updated:

Aaron Finch: "2024 உலகக்கோப்பையில் என்னால் ஆட முடியாது. அணியின் நலன் கருதி..." ஓய்வை அறிவித்த பின்ச்

ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டனான ஆரோன் பின்ச், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆரோன் பின்ச்

இலங்கைக்கு எதிராக 2011-ம் ஆண்டு டி20-ல் அறிமுகமான ஆரோன் பின்ச் இதுவரை 103 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின் 2013-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,406 ரன்களைக் குவித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்களை விளாசி, டி20 சர்வதேச அரங்கில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை பின்ச் படைத்துள்ளார்.

ஆரோன் பின்ச்
ஆரோன் பின்ச்

இதனிடையே, கடந்த 2022 செப்டம்பர் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்ச், டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது முழுமையாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை என்னால் விளையாட முடியாது என்பதை உணர்கிறேன். அணியின் நலன் கருதி, இதுவே நான் ஓய்வை அறிவிப்பதற்கான சரியான தருணம். அணி நிர்வாகம் புதிய கேப்டனை நியமித்து, டி20 உலககோப்பைக்கு என்று திட்டங்களை வகுக்க இதுதான் சரியான நேரமும் கூட.

Aaron Finch
Aaron Finch
AP

12 வருடங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியதையும்,  சில தலைசிறந்த வீரர்களுடன் விளையாடியதையும் என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற தருணத்தையும், 2015-ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற தருணத்தையும் என்னால் என்றும் மறக்க முடியாது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் என்னை தொடர்ந்து ஆதரித்த எனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆரோன் பின்ச் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.