Published:Updated:

`43 ஆண்டுகளில் நான் பார்த்திடாத அதிசயம்' - ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பாராட்டிய பயிற்சியாளர்

ரிங்கு சிங், சந்திரகாந்த் பண்டிட்

"நான் பார்த்த சிறந்த பேட்டிங்கில் இது தான் மிகச்சிறந்தது”- கொல்கத்தா அணியின் கோச் சந்திரகாந்த் பண்டிட்

Published:Updated:

`43 ஆண்டுகளில் நான் பார்த்திடாத அதிசயம்' - ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பாராட்டிய பயிற்சியாளர்

"நான் பார்த்த சிறந்த பேட்டிங்கில் இது தான் மிகச்சிறந்தது”- கொல்கத்தா அணியின் கோச் சந்திரகாந்த் பண்டிட்

ரிங்கு சிங், சந்திரகாந்த் பண்டிட்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்ததோடு பல சாதனைகளையும் படைத்திருக்கிறார் ரிங்கு சிங்.

Rinku Singh | ரிங்கு சிங்
Rinku Singh | ரிங்கு சிங்

ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து போட்டியை ஜெயித்துக்கொடுத்த ரிங்கு சிங்கிற்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்  கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ரிங்கு சிங்கை பாராட்டி பேசியிருக்கிறார். "என்னுடைய இத்தனை வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல போட்டிகளை ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்து பார்த்திருக்கிறேன்.

அதில் இரண்டு போட்டிகள் என்னால் மறக்கவே முடியாது அந்த இரண்டு போட்டிகளும் என்னைமிகவும் வியக்க வைத்தது. அதில் ஒன்று  ரஞ்சிக்கோப்பையில் ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த போட்டி. இரண்டாவது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத். ஆனால் இன்று இந்த இரண்டு ஆட்டங்களையும் மிஞ்சும் அளவிற்கு ரிங்கு சிங் ஆட்டம் இருந்தது. 43 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை கண்டதில்லை.” என்று பாராட்டி இருக்கிறார்.