ஐபிஎல் சிக்ஸர்களை விஞ்சும் பிக் பாஷ் லீக்... தெறிக்கவிடும் லீடிங் லேடி கிரிக்கெட்டர்ஸ்! #WBBL

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இந்த லீக், உள்ளூர் ரசிகர்களைக் கட்டிப்போடாமல் இருக்குமா? ஆஸ்திரேலிய ரசிகர்கள் பிக் பாஷ் தொடரைப் பார்ப்பது மட்டுமன்றி, ஒரு படி மேலேறி அவர்களுடைய பெண் குழந்தைகளையும் ஆர்வத்தோடு கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

`பெண்களுக்கான பிக் பாஷ் லீக்’ ஆஸ்திரேலிய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள கிரிக்கெட் தொடர். 2011-ம் ஆண்டு இந்த லீக் அறிமுகமானபோது சரியான ஒளிபரப்பு தளம்கூட இதற்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில், பெண்களுக்கான பிக் பாஷ் லீக், தற்போது பயணித்து வந்துகொண்டிருப்பது வெகுதூரம். உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்துகொள்ளும் இந்த டி-20 தொடர், இப்போது 5-வது சீஸனை எட்டியுள்ளது.
எல்லீஸ் பெர்ரி, அலீசா ஹீலி என ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்ஸ், மைதானத்தில் வெளுத்து வாங்கியதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகரான அனைத்து சுவாரஸ்யமும் அதிரடியும் பெண்கள் கிரிக்கெட்டிலும் இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள்! சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இந்த லீக், உள்ளூர் ரசிகர்களைக் கட்டிப்போடாமல் இருக்குமா. ஆஸ்திரேலிய ரசிகர்கள், பிக் பாஷ் தொடரை விடாமல் பார்ப்பது மட்டுமன்றி, ஒரு படி மேலேறி அவர்களுடைய பெண் குழந்தைகளையும் ஆர்வத்தோடு கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அடிலேட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ், சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தன்டர்ஸ் என மொத்தம் 8 அணிகள் இந்த லீகில் பங்கேற்க, பிக் பாஷ் சூப்பர் லேடீஸ் பற்றிய சின்ன அலசல் இதோ.
எல்லீஸ் பெர்ரி
16 வயதுக்குள் கிரிக்கெட், கால்பந்து என இரண்டு விளையாட்டுகளிலும் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தவர் எல்லீஸ் பெர்ரி. இரண்டு விளையாட்டுகளிலும் முன்னணி வீராங்கனையாகக் களம் கண்ட சிறப்பும் இவருக்கு உண்டு. ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டா, கால்பந்தா எனக் காலம் செக் வைக்க, கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார் எல்லீஸ்.
கிரிக்கெட், கால்பந்து எனத் தனித்தனியே இரண்டிலும் அசத்திக் கொண்டிருந்தவரை ஒரு விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தச் சொன்னால், அவர் சும்மாவிடுவாரா. கிரிக்கெட்டையே முழு நேர விளையாட்டாக மாற்றிக்கொண்டார் எல்லீஸ். ஒரு நாள், டி-20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்களிலும் கலக்கிய அவர், சிறந்த ஆல்-ரவுண்டராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு விளையாடினார்.
பிக் பாஷ் லீகில் எல்லீஸ்
70 போட்டிகள் ; 2612 ரன்கள் ; அதிகபட்சம் 103* ; 32 விக்கெட்டுகள் ; (2-11) பெஸ்ட் பௌலிங்
2612 ரன்களுடன் பெண்களுக்கான பிக் பாஷ் தொடர் வரலாற்றில் லீடிங் ரன் ஸ்கோரராக இருக்கும் எல்லீஸ், பெண்கள் கிரிக்கெட்டில் அதிக கவனம்பெற்ற வீராங்கனை. சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டனான இவர், பிக் பாஷ் லீகின் நான்கு சீஸனிலும் அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். தவிர, இரண்டு முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது சிட்னி சிக்சர்ஸ்!

அலீசா ஹீலி
பிக் பாஷ் லீகில் அலீசா ஹீலி
72 போட்டிகள் ; 1929 ரன்கள் ; அதிகபட்சம் 112* ; 133.13 ஸ்ட்ரைக் ரேட்
2018-ம் ஆண்டுக்கான ஐசிசி டி-20 வீராங்கனைக்கான விருதை வென்றவர் அலீசா ஹீலி. மகளிருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான இவர், பேட்டிங்குக்கான ஒரு நாள் மற்றும் டி-20 தரவரிசையில், 3-வது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
பிக் பாஷ் லீகின் மற்றுமொரு முக்கியமான வீராங்கனை. 2018-ம் ஆண்டு அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 69 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஹீலி. பெண்களுக்கான பிக் பாஷ் வரலாற்றில், தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது. இந்த சீஸனில் மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான போட்டியில், எல்லீஸ் பெர்ரியுடன் ஜோடி சேர்ந்த ஹீலி, 199 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனையைப் படைத்தார்.

டானி வியாட்
பிக் பாஷ் லீகில் டானி வியாட்
42 போட்டிகள் ; 922 ரன்கள் ; அதிகபட்சம் 66 ; 22 விக்கெட்டுகள் ; (4-12) பெஸ்ட் பௌலிங்
இங்கிலாந்து அணிக்காக ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார் டானி வியாட். பிக் பாஷ் லீகில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் சீஸனுக்குப் பிறகு மீண்டும் 4-வது சீஸனில் மெல்போர்ன் அணியில் இணைந்தவர், அணியின் முக்கியமான வீராங்கனையாகத் திகழ்ந்து வருகிறார்.

சோஃபி டிவைன்
பிக் பாஷ் லீகில் சோஃபி டிவைன்
60 - போட்டிகள் ; 1,879 ரன்கள் ; அதிகபட்சம் 103* ; 55 விக்கெட்டுகள் ; (5-6) பெஸ்ட் பௌலிங்
மகளிருக்கான டி-20 கிரிக்கெட்டின் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சோஃபி டிவைன், நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். போக, டி-20 வரலாற்றில் அதிவேக அரை சதம் கடந்த வீராங்கனை. அதுமட்டுமன்றி, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 18 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார்.
பிக் பாஷ் தொடரில் 1,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் சோஃபி டிவைன். பேட்டிங்கில்தான் அதிரடியென்றால் பௌலிங்கிலும் அசத்தக்கூடியவர். வேகப்பந்துவீச்சாளரான சோஃபி, சிட்னி ஸ்டார்ஸ்க்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிக் பாஷ் தொடரின் `Most Valuable’ ப்ளேயருக்கான விருதையும் பெற்றார்.

மரிசேன் காப்
பிக் பாஷ் லீகில் மரிசேன் காப்
67 - போட்டிகள் ; 590 ரன்கள் ; அதிகபட்சம் 55* ; 76 விக்கெட்டுகள் ; (4-13) பெஸ்ட் பௌலிங்
தென்னாப்பிரிக்கா மகளிர் அணியைச் சேர்ந்த மாரிசேன் காப், பிக் பாஷ் லீகின் முதல் சீஸனிலிருந்து சிட்னி சிக்சர்ஸுக்காக விளையாடி வருகிறார். வேகப்பந்துவீச்சாளரான இவர், சிட்னி சிக்சர்ஸ் அணியின் பௌலிங் அட்டாக்கில் முக்கிய வீராங்கனை. இந்த சீஸனில், மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்-ட்ரிக் எடுத்து அசத்தினார்.

நடாலி சிவர்
2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நடாலி சிவர், இங்கிலாந்து மகளிர் அணியின் ஆல்-ரவுண்டர். அதே ஆண்டு, நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் நடாலி ஹாட் ட்ரிக் விக்கெட்களை எடுத்துக் கலக்கினார். சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், ஹாட்ரிக் எடுத்த முதல் இங்கிலாந்து கிரிக்கெட்டர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
2017-18 சீஸனில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டும் தற்போது மீண்டும் பெர்த் அணியில் இணைந்துள்ளார்.

சூசி பேட்ஸ்
பிக் பாஷ் லீகில் சூசி பேட்ஸ்
64 - போட்டிகள் ; 1,606 ரன்கள் ; அதிகபட்சம் 102 ; 33 விக்கெட்டுகள் ; (3-6) பெஸ்ட் பௌலிங்
நியூசிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான இவர், ஐசிசி கிரிக்கெட் டி-20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளார். 2018 ஐசிசி டி-20 உலகக்கோப்பையின்போது சர்வதேச டி-20 போட்டிகளில் 3,000 ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை நிகழ்த்தினார். பிக் பாஷ் லீகின் முதல் சீஸனிலிருந்து அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர். 2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹிதர் நைட், இங்கிலாந்து அணியில் விளையாடி வருகிறார். 2016-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி கேப்டனாகப் பொறுப்பேற்று 2017 பெண்களுக்கான ஐசிசி உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து அணிக்குத் தலைமையேற்கத் தொடங்கினார். பிக் பாஷ் முதல் சீஸனிலிருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டனும் இவர்தான்.

ஹிதர் நைட்
பிக் பாஷ் லீகில் ஹிதர் நைட்
43 - போட்டிகள் ; 1,091 ரன்கள் ; அதிகபட்சம் 82* ; 33 விக்கெட்டுகள் ; (3-7) பெஸ்ட் பௌலிங்.
2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹிதர் நைட், இங்கிலாந்து அணியில் விளையாடி வருகிறார். 2016-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி கேப்டனாகப் பொறுப்பேற்று 2017 பெண்களுக்கான ஐசிசி உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து அணிக்குத் தலைமையேற்கத் தொடங்கினார். பிக் பாஷ் முதல் சீஸனிலிருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டனும் இவர்தான்.

பெலிண்டா வாகரெவா
பிக் பாஷ் லீகில் பெலிண்டா வாகரெவா
43 - போட்டிகள் ; 23 விக்கெட்டுகள் ; (3-8) பெஸ்ட் பௌலிங்
நியூசிலாந்து வீராங்கனையான பெலிண்டா வாகரெவாவுக்கு வயது 19 . பிக் பாஷ் 5-வது சீஸனிலிருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வேகப்பந்து வீச்சாளரான பெலிண்டா, இந்த சீஸனினின் லீடிங் விக்கெட் டேக்கராக அசத்தி வருகிறார். 11 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் இவர், ஹோபர்ட் அணியின் பௌலிங் யூனிட்டின் துருப்புச்சீட்டு!

பெத் மூனி
பிக் பாஷ் லீகில் பெத் மூனி
71 - போட்டிகள் ; 2,369 ரன்கள் ; அதிகபட்சம் 102*
2018 ஐசிசி மகளிருக்கான டி-20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த பெத் மூனி, ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமன்.
பிக் பாஷின் கடந்த சீஸனில் கோப்பையை வென்ற ப்ரிஸ்பேன் ஹீட் அணியில் விளையாடியவர். இந்த ஆண்டு, இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 536 ரன்கள் எடுத்திருக்கிறார். தவிர, இந்த சீசனின் லீடிங் ரன் ஸ்கோரராகவும் உள்ளார்