Published:Updated:

T20 WC: "இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் மிகவும் அவசியம்!"- யாரைச் சொல்கிறார் சுரேஷ் ரெய்னா?

சுரேஷ் ரெய்னா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் மிகவும் அவசியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Published:Updated:

T20 WC: "இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் மிகவும் அவசியம்!"- யாரைச் சொல்கிறார் சுரேஷ் ரெய்னா?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் மிகவும் அவசியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் கட்டமான குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நாளை (16.09.2020) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கின்றன. நாளை தொடங்கும் இப்போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் இடது கை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்திய அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆனால் எதிரணியில் கண்டிப்பாக 2 அல்லது 3 பேர் இடதுகை பந்து வீச்சாளர்களாவது இருப்பார்கள்.

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகள் மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் என்னைப் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தோம். அதேபோல தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து விளையாடக்கூடிய வகையில் ரிஷப் பண்ட் சிறந்த காரணியாக இருப்பார்.

Rishab Pant
Rishab Pant

தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். யுவராஜ் சிங்கும் நானும் விளையாடும்போது எதிரணியினரை பயமுறுத்துவோம். இப்போது ராகுல், ரோஹித் அதை எப்படிச் செய்யவேண்டும் என்று யோசிக்க வேண்டும். யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற வேண்டும். இடது, வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையானது பந்து வீச்சை சீர்குலைக்கும். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் பெரிய ஆடுகளங்கள் இருக்கும். அதனால் நடுவரிசையில் இடது கை பேட்ஸ்மேனை வைத்திருப்பது மிகவும் முக்கியம். ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். தொடரை வெல்லவும் உதவியுள்ளார். எனவே அவர்தான் என் சாய்ஸ்" என்று அவர் கூறியிருக்கிறார்.