Published:Updated:

க்ளோஸ் டோரில் ஐந்து டெஸ்ட் போட்டிகள்... இந்தியத் தொடருக்கு தயாராகும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா வீரர்கள்
ஆஸ்திரேலியா வீரர்கள்

"நிர்வாக அமைப்பு ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும். ஏனெனில், இந்த வருடத்தின் இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் நன்றாக அமைந்தால் வருவாய் கிடைக்கும். நாங்கள் விளையாட்டு வீரர்களுடன் ஆலோசித்து செயல்படுகிறோம்.''

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அடிலெய்டு ஓவல் மைதான புது விடுதிகளில் தங்கி, ஐந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடினர். இந்த மாறுபட்ட முடிவிற்கான காரணம், இந்தியாவில் கொரோனா நோய்ப் பரவல் தொடரும் பட்சத்தில், இந்தியாவிற்கான விளையாட்டுப் பயணம் அடுத்த கோடைகாலத்தில் அமையவிருக்கிறது. அதை உறுதியாக எதிர்கொண்டு விளையாட மேற்கொண்ட நிகழ்ச்சி ஒரு முன் அனுபவமாக அமையும்.

க்ளோஸ் டோரில் ஐந்து டெஸ்ட் போட்டிகள்... இந்தியத் தொடருக்கு தயாராகும் ஆஸ்திரேலியா!

"ஒரே இடத்தில் பல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது சாத்தியமான ஒன்றுதான்; மேற்கண்ட முடிவுதான் கடைசிப் புகலிடமாக அமையும். அப்படி நடத்தப்படுவதாக இருந்தால், அந்த இடம் அடிலெய்டு ஆகத்தான் இருக்கும் எனக் கருதுகிறேன். நாங்கள் ஆஸ்திரேலியாவின் பல இடங்களுக்குச் சென்று, அந்த இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவது எங்களுக்கான சுயசவாலாகும். அப்படி நடந்திருந்தால் அதிலும் அடிலெய்டு தான் சிறந்த இடமாக இருக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட்.

கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலர் கெவின் ராபர்ட்ஸ் வலியுறுத்தி கூறியதாவது, "நிர்வாக அமைப்பு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். ஏனெனில், இந்த வருடத்தின் இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் நன்றாக அமைந்தால் வருவாய் கிடைக்கும். நாங்கள் விளையாட்டு வீரர்களுடன் ஆலோசித்து செயல்படுகிறோம். நாங்கள் பழைய ஓய்வூதிய முறையை மதிக்கிறோம். ஆனால், தற்போதைய சூழ்நிலைக்குத் தகுந்த மற்றும் 2017ல் வெளியிட்ட ஊதிய முரண்பாடுகளைக் களையும் விதமாக ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டியதும் அவசியம். அதன் அடிப்படையில்தான் வீரர்களின் ஊதியம் மற்றும் சிறிய போட்டிகள் நடத்துவதற்கான நிதி நிர்ணயம் அமையும். கடந்த பத்தாண்டு காலமாக நிலவிவரும் அதிகப்படியான நிதி புழக்கம் தொடரவேண்டும். இந்த சிக்கலான சூழலில் இந்தியப் பயணத்திற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பையை நடத்துவது என்பது சவாலான ஒன்றாகும்.

க்ளோஸ் டோரில் ஐந்து டெஸ்ட் போட்டிகள்... இந்தியத் தொடருக்கு தயாராகும் ஆஸ்திரேலியா!

இந்த நிலையில், இந்திய விளையாட்டுப் பயணத்தை முழுவதும் நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிரிக்கெட் உலகத்திற்கு எழுச்சியூட்டும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும். மேலும், இந்த கூட்டு முயற்சியின் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் அல்லது அகில உலக டெஸ்ட் போட்டிகளுக்கு வழிவகுக்கும் விதமாகவும் அமையும்" என்றார். வரும் அக்டோபர் மாதத்தில், இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு