Published:Updated:

ஆவணத்தொடராகும் இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றி; `தோனி' பட இயக்குநர் இயக்கும் இதில் என்ன ஸ்பெஷல்?

Border Gavaskar Trophy 2020-21

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் எப்படி எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி பெற்றனர் என்கிற கதையை ஆவணத் தொடராக மாற்றியுள்ளனர்.

ஆவணத்தொடராகும் இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றி; `தோனி' பட இயக்குநர் இயக்கும் இதில் என்ன ஸ்பெஷல்?

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் எப்படி எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி பெற்றனர் என்கிற கதையை ஆவணத் தொடராக மாற்றியுள்ளனர்.

Published:Updated:
Border Gavaskar Trophy 2020-21

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளில் 2020-21 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றியும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே, 32 வருடங்கள் அவர்கள் ஆண்டுவந்த Gabba கோட்டையைத் தகர்த்திய இந்திய அணியின் கதை ஆவணத் தொடராகத் தயாராகியுள்ளது.

`Bando Mein Tha Dum' என்கிற பெயரில் வெளிவரும் இந்த சீரிஸை `M.S.Dhoni: The Untold Story' படத்தின் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். Voot Select OTT தளத்தில் இந்தத் தொடர் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது.

கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவங்கள் பல நிறைந்தது இந்த டெஸ்ட் தொடர். நான்கு போட்டிகளில் முதல் போட்டியில் 36 ரன்களில் மிக மோசமாக இந்திய அணி தோற்றது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்ப நேர்ந்தது. இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தனர். ரஹானே இரண்டாவது போட்டியில் சதமடித்து அணியைக் காப்பாற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Bando Mein Tha Dum
Bando Mein Tha Dum

ஒரு பக்கம் சரிந்து வரும் இந்திய வீரர்கள், மறுபுறம் அரக்கத்தனமான ஆஸ்திரிலேய வீரர்கள். இந்திய அணி எல்லாவற்றையும் சமாளித்து எப்படி வெற்றி பெற்றது என்கிற கதையை உணர்ச்சிபூர்வமான ஆவணத் தொடராக மாற்றியுள்ளனர்.

ரஹானே, புஜாரா, ரவிச்சந்திரன் அஷ்வின், சிராஜ், பண்ட், விஹாரி, பயிற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள் என அந்த டெஸ்டின் அங்கத்தினர் பார்வையில் இந்த வரலாறு மற்றொரு முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

"இதிலுள்ள மனிதர்களின் கதைகள் கிரிக்கெட் ரசிகர்களைத் தாண்டி இந்தியர்கள் அனைவரையும் பரவசப்படுத்தும். விளையாட்டிலும் கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த கம்பேக்குகளில் ஒன்று இது. இந்தக் கதையைச் சொல்வதற்கு எங்களைத் தூண்டியதே இந்திய ரசிகர்களுக்கு அணியின் மீதான பிடிப்புதான்" என்கிறார் நீரஜ் பாண்டே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism