Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸ் துணை பயிற்சியாளர், ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளர் ஆனார்!

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பங்கேற்கும் ஒருநாள் ஆட்டங்களில் இவர் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துணைப் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தலைமைப் பயிற்சியாளராக இருந்த தென்னாப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிக்சன் இதுவரை உதவி பயிற்சியாளராக இருந்தார். அவரது பயிற்சித் திறமையை அறிந்து கொள்ளும் வகையில் அவருக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 2-ல் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது மிக்கி ஆர்தர் பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.