Published:Updated:

உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

டவுன்ஸ்வில்லே: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது.

19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இன்று நடந்த இறுதி லீக் ஆட்டத்தில் பாப்புவா நியூ கினியா அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதே போல் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து, காலிறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதல் உறுதி ஆனது.

இதுவரை உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெறுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 20 டவுன்ஸ்வில்லே மைதானத்தில் நடைபெறுகிறது.