Published:Updated:

கோஹ்லியை வீழ்த்த புது வியூகம் அமைக்க வேண்டும்: தில்ஷான் புலம்பல்!

கோஹ்லியை வீழ்த்த புது வியூகம் அமைக்க வேண்டும்: தில்ஷான் புலம்பல்!
கோஹ்லியை வீழ்த்த புது வியூகம் அமைக்க வேண்டும்: தில்ஷான் புலம்பல்!
கோஹ்லியை வீழ்த்த புது வியூகம் அமைக்க வேண்டும்: தில்ஷான் புலம்பல்!

புது டெல்லி:  20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது விராட் கோஹ்லிக்கு எதிராக சிறப்பு வியூகம் வகுக்க வேண்டுமென இலங்கை தொடக்க வீரர் தில்ஷான் கூறியுள்ளார்.

இந்திய அணி சமீபத்திய இலங்கை சுற்றுப் பயணத்தின் போது கோஹ்லி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இலங்கை எதிரான அந்த தொடரில் இவரது ஆட்டம் பந்து வீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இவரது ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். கோஹ்லியை எளிதில் ஆட்டமிழக்க முடியவில்லை.

இதற்கு பலனாக இலங்கை அணி தொடரை மோசமாக இழந்தது. ஒட்டுமொத்த் ஆட்டநாயகன் விருது கோஹ்லிக்கு கிடைத்தது.

இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இலங்கையில் செப்டம்பர் 18-ல் தொடங்குகிறது. இப்போட்டி தொடர்பாக இலங்கை தொடக்க வீரர் தில்ஷான் கூறியதாவது:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் இந்தியாவை இலங்கை எதிர்கொள்ளவில்லை. எனினும் சூப்பர் 8 மற்றும் அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்திய அணியில் இளம் வீரர் கோஹ்லி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபகாலமாக மட்டுமல்லாது, 2011 உலகக் கோப்பையில் இருந்தே அவர் எதிரணிக்கு பெரும் சவாலாக விளங்குகிறார்.

அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினமாக உள்ளது. எனவே அவருக்கு எதிராக விளையாடும் போது, சிறப்பு வியூகம் அமைப்பது அவசியமாக கருதுகிறோம்.

இலங்கை அணியை கிலியில் ஆழ்த்தியுள்ள கோஹ்லி 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 3,886 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 51.81. இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கோஹ்லி 491 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 32.73.