Published:Updated:

நியூசிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணிக்கு அபிநவ் முகுந்த் கேப்டன்!

நியூசிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணிக்கு அபிநவ் முகுந்த் கேப்டன்!
நியூசிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணிக்கு அபிநவ் முகுந்த் கேப்டன்!
நியூசிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணிக்கு அபிநவ் முகுந்த் கேப்டன்!

பெங்களூரு: செப்டம்பர் மாதம் நியூசிலாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய ஏ அணிக்கு தமிழக வீரர் அபிநவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஏ அணி வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் போட்டிகளிலும், ஒரு 20 ஓவர் போட்டியிலும் பங்கேற்கிறது. மேலும் 2 நான்கு நாட்கள் போட்டிகளில் இந்த அணி பங்கேற்கிறது.

இதற்கான அணி தேர்வு இன்று நடைபெற்றது.

இதில் கடந்த ஜூன் மாதம் 2012 மேற்கு இந்திய தீவுகள் அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் விர்த்திமான் சாஹா, வேகப்பந்து வீச்சாளார் பர்விந்தர் ஆவானா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். புஜாரா பிரதான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால் அவரும் இதில் இடம்பெறாவில்லை.

இவர்களுக்கு பதில் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரித்துராஜ் சிங், ஜெயதேவ் உன்னாகத், அம்பட்டி ராயிடு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: அபிநவ் முகுந்த் (கேப்டன்), அசோக் மெனாரியா, நமன் ஓஜா, மந்தீப் சிங், அனுஸ்டுப் முஜும்தார், அம்பட்டி ராயிடு, புவனேஸ்வர் குமார், அக்‌ஷய் தரேகர், வினேய் குமார், ஹமீ அஹமத், சூர்யகுமார் யாதவ், ஜலஜ் சாக்‌ஷனா, ராகுல் சர்மா, ரித்துராஜ் சிங், ஜெயதேவ் உன்னாகத், உமக் சந்த்.