Published:Updated:

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

பல்லகெலே: இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அங்குள்ள பல்லிகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக சேவாக், ஜாகீர்கான் ஆகியோர் இடம்பெறவில்லை. சேவாக்குக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானேவும், ஜாகீர்கானுக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே பீல்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான காம்பீர் 6 ரன்னில் வீழ்ந்தாலும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானேவும், கோஹ்லியும் சிறப்பாக ஆடினர். ஒருபக்கம் ரஹானே பொறுமையாக ஆட, மறுமுனையில் கோஹ்லி அதிரடியாக ஆடி ரன் குவித்தார். ரஹானே 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோஹ்லியும், ரெய்னாவும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர்.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

சிறப்பாக ஆடிய கோஹ்லி 32 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அவர் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. ரெய்னா 34 ரன்களுடனும், டோனி 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் பிதுமுக வீரர் எரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

இர்ஃபான் பதான் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் தில்ஷான் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. பின்னர் வந்த தரங்கா 5 ரன்கள் எடுத்திருந்தபோது பதான் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சற்று வேகம் காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஜெயவர்த்தனா 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையும் பதானே வீழ்த்தினார். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

பின்னர் வந்தவர்களில் திரிமன்னே 20, மேத்யூஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ஜீவன் மெண்டிஸ் 11 ரன்களில் வெளியேறினார்.

இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. அந்த அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை இந்தியாவின் அசோக் திண்டா அடுத்தடுத்து வீழ்த்த இலங்கை 116 ரன்களில் சுருண்டது.

இதனால் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய பதான் ஆட்டநாயகனாகவும், சிறப்பாக பேட்டிங் செய்த கோஹ்லி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.