Published:Updated:

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி!

Vikatan Correspondent
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி!
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி!
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி!

ஹம்பன்டோட்டா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது!

5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஹம்பன்டோட்டாவில் நடந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை கடைபிடித்த சேவாக் 15 ரன்னில் வெளியேறினார்.

சேவாக்கை தொடர்ந்து களமிறங்கிய மற்ற முன்னணி வீரர்களான கோஹ்லி (1), ரோஹித் சர்மா (0), ரெய்னா(1) ஆகியோர் விரைவில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

கோப்டன் தோனி தன் பங்குக்கு 11 ரன்களை மட்டுமே சேர்த்து வெளியேற, இந்திய அணி தோல்வி அப்போதே முடிவானது. ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தன் பங்குக்கு 6 ரன்னிலும், சற்று நேரம் தாக்குப்பிடித்த அஸ்வின் 21 ரன்னிலும், ஜாகீர் கான் 2 ரன்னிலும், ஓஜா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரரான கம்பீர் மட்டும் சற்று தாக்குப்பிடித்து அரை சதம் அடித்தார். இறுதியில் கம்பீர் (65 ரன்னில்) ஆட்டமிழக்க, இந்திய அணி 138 ரன்னில் சுருண்டது.

இலங்கை அணி தரப்பில் பெரேரா, மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மலிங்கா 2 விக்கெட்களும், ஹீரத் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 19.5 ஓவரில் வெற்றி வாகை சூடியது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான தில்ஷான் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். மற்றொரு துவக்க வீரர் உபல் தரங்கா 59 ரன்களிலும், சந்திமால் 6 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தனர்.

10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கவிருந்த இலங்கை அணியின் முறய்சி தில்ஷான் அவுட்டால் கை நழுவி போனது.!

இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் 28ஆம் தேதி (சனிக்கிழமை) கொலும்பு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.