Published:Updated:

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் ? இன்று நடக்கிறது நேர்காணல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் ? இன்று நடக்கிறது நேர்காணல்
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் ? இன்று நடக்கிறது நேர்காணல்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் ? இன்று நடக்கிறது நேர்காணல்

 இந்திய அணியில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, பயிற்சியாளருக்கான இடம் காலியாக உள்ளது. இந்நிலையில் இன்று அந்த இடத்துக்கான நேர்காணல் நடைபெறுகிறது.


இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகத் தலைமை பயிற்சியாளர் இல்லாமலே விளையாடியது. தற்போது பி.சி.சி.ஐ புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தற்போது அதற்கான நேர்காணல் நடைபெற உள்ளது. பத்து பேர் வரை இந்தப் பதவிக்காக விண்ணப்பித்திருந்தாலும், அதில் முதல் ஆறு பேரிடமே இன்று நேர்காணல் நடை பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரங்களான, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய  குழு இந்த நேர்காணலை நடத்துகிறது. ஆறு பேர் இந்தப் பட்டியலில் இருந்தாலும் இவர்களில் ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ரவி சாஸ்திரி ஏற்கெனவே இந்திய அணியில் பயிற்சியாளர் இல்லாத காலகட்டத்தில் அணியின் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அப்போது பணியாற்றியபோதும் இந்திய கேப்டன் கோலியிடம் நெருக்கமாகப் பணியாற்றியதால் கோலி சாஸ்திரிக்கே அதரவு அளிப்பார் என்று தெரிகிறது. எனினும், ரவிசாஸ்திரி கடந்த முறையும் இந்தப் பதவிக்கு விண்ணபித்திருந்தார். அப்போது நேர்காணலில் நேரடியாகப் பங்கேற்க முடியாததால் வீடியோ மூலம் பங்கேற்றார். புதிய பயிற்சியாளராக கும்ப்ளே அறிவிக்கப்பட்ட பிறகு, அப்போது தேர்வுக் குழுவில் இருந்த கங்குலி மீது குற்றச்சாட்டு வைத்தார் சாஸ்திரி. அதற்கு கங்குலியும் பதிலடி கொடுத்தார். தற்போது உள்ள குழுவிலும் கங்குலி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக்குக்குப் பயிற்சியாளராக முன் அனுபவம் இல்லாதபோதும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

ஆஸ்திரேலியாவின் டாம் மூடி-யும் இந்தப் போட்டியில் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணியை உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றவர். ஐ.பி.எல் தொடரிலும் ஹைதராபாத் அணி பட்டம் வெல்ல காரணமாக இருந்தவர். ஒருவேளை வெளிநாட்டுக்காரருக்கு வாய்ப்பளித்தால் அதில் டாம் மூடிக்குதான் அதிக வாய்ப்பு உள்ளது. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த சிம்மொன்ஸ்யும் இன்று நேர்காணலில் பங்கேற்க உள்ளார். 

இன்றே பயிற்சியாளருக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயிற்சியாளராகத் தேர்ந்தேடுக்கப்படுபவர் அடுத்து தொடங்க இருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து 2019  உலகக் கோப்பை வரை இந்திய அணியின்  பயிற்சியாளராக நீடிப்பார்.  
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு