Published:Updated:

2019 உலகக்கோப்பை வரை தோனி இந்திய அணியில் இருப்பாரா? - சிவராமகிருஷ்ணன் பேட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
2019 உலகக்கோப்பை வரை தோனி இந்திய அணியில் இருப்பாரா? - சிவராமகிருஷ்ணன் பேட்டி
2019 உலகக்கோப்பை வரை தோனி இந்திய அணியில் இருப்பாரா? - சிவராமகிருஷ்ணன் பேட்டி

2019 உலகக்கோப்பை வரை தோனி இந்திய அணியில் இருப்பாரா? - சிவராமகிருஷ்ணன் பேட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1980-களில் கிரிக்கெட்டை ரசித்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ரைட்-ஆர்ம் லெக் ஸ்பின்னர் என்றால் அது எல். சிவராமகிருஷ்ணன்தான். முதன் முதலில் இவர் தனது 12 வயதில் மெட்ராஸ் இன்டர்-ஸ்கூல் சாம்பியன்ஷிப் விளையாட்டில் 2 ரன்கள் (7/2) 7 விக்கெட்களை எடுத்து கிரிக்கெட் பிரியர்களிடையே கவனத்தை ஈர்த்தார். தனது 15-வது வயதில், 19 வயதுக்கும் கீழ் உள்ள கிரிக்கெட் அணியின் இளைய உறுப்பினராக ஆரம்பித்தது இவரது கிரிக்கெட் பயணம். இன்றளவும் கிரிக்கெட்டில் பங்காற்றிவரும் இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரிகளையும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பிளேயர் ரெப்ரசென்டாகவும் உள்ளார். வருகிற ஜூலை 22-ம் தேதி, TNPL ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதுகுறித்து சிவராமகிருஷ்ணனிடம் ஒரு எஸ்க்ளுசிவ் கிரிக்கெட் பேட்டி கண்டோம். 

“ஜூலை 22-ம் தேதி நடக்கப்போகும் TNPL கிரிக்கெட்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கு?"

"கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் ஒருபோதும் வெற்றி வாய்ப்பை கணிக்கவே முடியாது'ன்றதுதான் உண்மை. அதுவும் 20-20 மேட்ச்சில் துளிகூட உறுதியா எதையுமே சொல்ல முடியாது. அந்த நேரம் க்ரவுண்ட் அமைப்பு, பிளேயர்களோட மனநிலை, சூழல், நேரம் எல்லாத்தையும் பொறுத்துதான் வெற்றி அமையும். ஆனால், கோச்சிங் கேம்ப் மற்றும் ப்ரிபரேஷன் கேம்பில் எல்லா அணிகளும் ரொம்ப நல்லா விளையாடுறாங்க."

"TNPLல் உங்களோட பங்கு..."

"கவுன்சில் உறுப்பினர். அப்புறம் எப்பயும் போல காமெண்ட்ரி பண்ணுவேன். அவ்வளோதான்."

"TNPLல் இருந்து இந்திய கிரிக்கெட் டீமுக்கு பிளேயர்களால் ஈஸியா தகுதிநிலையை அடைய முடியுதா?"

"அதற்கான முயற்சிகளை எடுத்தா நிச்சயமா டீமுக்கு போக முடியும். தமிழ்நாட்டுல நல்லா விளையாடி தினேஷ் கார்த்திக் டீமுக்கு போயிருக்காரு. அந்த மாதிரி அபிநவ் முகுந்த் TNPLக்கான டெஸ்ட் மேட்ச்சில் விளையாடுறப்போ, அவரோட பர்ஃபாமன்ஸ் நல்லா இருந்ததுனால அவரும் டீமுக்கு போயிருக்காரு. இனிவரும் பிளேயர்ஸ் நல்லா விளையாடினா, கண்டிப்பா நிறைய வாய்ப்புகள் வரும்."

"தினேஷ் மற்றும் அபிநவ் மாதிரி இந்த தடவை எந்த பிளேயர் டீமுக்கு போகுற அளவுக்கு ஃபார்ம்ல இருக்காங்க?"

"நிறைய பேர் இருக்காங்க. பவுலர்களில் நட்ராஜ் (லெஃப்ட் ஆர்ம்), பேட்ஸ்மேன்களில் கௌஷிக் காந்தி, விக்கெட் கீப்பர்களில் ஜெகதீசன் இவங்களுக்கெல்லாம் நல்ல வாய்ப்புகள் இருக்கு. தவிர, போன வருஷம் எப்படி ஆண்டனி தாஸ் நல்லா விளையாடினாரோ, அதேமாதிரி இந்த வருடமும் விளையாடுன்னா அவருக்கும் நல்ல வாய்ப்புகள் இருக்குது."

"கேப்டனா விராட் கோலி பற்றி... "

“ரொம்ப நல்ல கேப்டன்ஷிப். விளையாட்டுலையும் சரி, கேப்டன்சிலையும் சரி கோலி கொஞ்சம் அக்ரசிவ்தான். இவரு தலைமையில நிறைய டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சுருக்கோம். போன சீசன்ல வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவோட விளையாடி ஜெயிச்சுருக்கோம். இதுக்கெல்லாத்துக்கும் கோலியோட கேப்டன்சி ஒரு முக்கியக் காரணம். ஐசிசி சாம்பியன் ட்ராபியில்தான் ஒரேயொரு மேட்ச் சரியா ஆடலை. அதுக்கு கேப்டன்சியை குறை சொல்லமுடியாது. மொத்தத்துல கோலி சூப்பர் கேப்டன்."

"அஸ்வினுக்கு அடுத்ததா தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பின் பவுலர் யாரு?'

"எனக்கு தெரிஞ்சு சாய் கிஷோருக்கு வாய்ப்புகள் அதிகம். அடுத்ததா முருகன் அஸ்வின். இவரு TNPLலில் மட்டும் இல்ல. ரஞ்சி ட்ராஃபிலையும் கலக்கிக்கிட்டு வர்றாரு."

"2019 வேர்ல்ட் கப் வரையிலும் தோனி டீம்ல இருப்பாரா?"

“ரிட்டயர்மெண்ட் அவரோட விருப்பம். அதுதவிர தோனி இன்னும் ஃபிட்டாத்தான் இருக்காரு. உலகத்துலயே சிறந்த விக்கெட் கீப்பர், இன்னும் நிறைய நாள் கிரிக்கெட்ல இருக்கனும்னுதான் எல்லாரும் எதிர்பாக்குறாங்க."

"வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் தோனி 108 பாலில் வெறும் 50 ரன் எடுத்துனாலதான் இந்தியா தோத்துருச்சுன்னு சொல்றாங்களே..."

"கிரிக்கெட்ன்னா என்னன்னே தெரியாதவங்க அப்படித்தான் சொல்வாங்க. அவங்கக்கிட்ட அந்த 50 ரன்னையும் கணக்குல சேர்க்காம மைனஸ் பண்ண சொல்லுங்க பார்ப்போம். ஒருவேளை தோனி முதல் பால்லையே அவுட் ஆயிட்டாருன்னா என்ன பண்ணிருப்பாங்க? இப்படி சொல்றத எல்லாம் நம்ம காதுலயே வாங்கிக்கக்கூடாது."

"ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கமெண்ட்ரியைக் கேட்டாலே எரிச்சலா இருக்குன்னு சொல்றாங்களே... சமூக வலைதளங்கள்ல கிண்டல் அடிக்குறாங்களே..."

"எல்லாரும் அவங்களோட கருத்துகளை சோஷியல் மீடியால சொல்றதுக்குப் பதிலா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கே நேரடியா கருத்துகளை பதிவு பண்ணச் சொல்லுங்க. அப்போ ஸ்டார் நிறுவனம் அதுக்கான முடிவெடுக்கும்." 

"இந்திய அணிக்கு எதிர்காலம் எப்படி..."

“கடைசி பத்து வருஷமாவே இந்தியா நல்ல ஃபார்ம்ல இருக்கறதுனால நிறைய மேட்ச் ஜெயிச்சுட்டுவர்றாங்க. அதுதவிர பிளேயர்களை நிம்மதியா விட்டாலே நல்லா விளையாடுவாங்க. வீட்டைப் பிரிஞ்சு வருஷத்துக்கு 10 மாசம் விளைட்டுலயே கவனம் செலுத்தி, அவங்க சொந்த ஊருக்குப் போகும்போது கூட, மீடியாக்காரவங்க பிளேயர்சை பின்தொடர்ந்து, அவங்க என்ன பண்றாங்க, எந்த ஹோட்டல்ல சாப்புடுறாங்க, எங்க போறாங்கன்னு இப்படி எல்லாத்தையும் நியூஸ்ல போட்டா பிளேயர்ஸ் என்னதான் பண்ணுவாங்க. அவங்க மேல ப்ரஷர் போடுறத மீடியா தவிர்க்கணும். கொஞ்சம் நிம்மதியா விட்டாத்தான் நல்லா விளையாடுவாங்க" என்று ஆவேசத்துடன் அவர் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு