Published:Updated:

இந்தியா-பாகிஸ்தான் தொடர்: அப்ரிதி, மிஸ்பா வரவேற்பு!

கராச்சி: இந்தியா - பாகிஸ்தான் தொடர் குறித்து பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், முன்னாள் கேப்டன் அப்ரிடி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 
மும்பை தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு ஏடுக்கப்பட்டது. இத்டொடர் டிசம்பரில் நடைபெறவும் ஒப்புதல் பெறப்பட்டது. இது பல்வேறு தரப்பிலிருந்து, வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் 'இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளைக் காண இருநாட்டு ரசிகர்களும் எப்போதும் ஆவலாக உள்ளனர்’ என பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார்.
 
இத்தொடர் பற்றி கருத்து தெரிவித்துள்ள அப்ரிடி:- 'இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரை விடப் பிரபலமானது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் ரசிக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராக ஆடும்போது நெருக்கடி அதிகமாக இருந்தாலும், போட்டிகள் விறுவிறுப்பாக அமையும்’ எனக் கூறியுள்ளார்.