Published:Updated:

சுனில் நரைன் சூழற்பந்து வீச்சில் மேற்குஇந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

சுனில் நரைன் சூழற்பந்து வீச்சில் மேற்குஇந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
சுனில் நரைன் சூழற்பந்து வீச்சில் மேற்குஇந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
சுனில் நரைன் சூழற்பந்து வீச்சில் மேற்குஇந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

செயிண்ட் கிட்ஸ்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுனில் நரைன் பந்து வீச்சில் மேற்குஇந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
 
நியூசிலாந்து கிரிக்கெட் அணி மேற்குஇந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த 20 ஓவர் தொடரை மேற்குஇந்திய தீவுகள் அணி ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.
 
இதைதொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு ஆட்டங்களின் முடிவில் மேற்குஇந்திய தீவுகள் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸ் நகரிலுள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடந்தது.
 

சுனில் நரைன் சூழற்பந்து வீச்சில் மேற்குஇந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்குஇந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரசல் 40 பந்துகளில் 59 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக பிராவோ 53 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.
 
இதன்பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் வில்லியம்சன் (68 ரன்கள்) தவிர யாரும் சிறப்பாக ஆடாததால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்குஇந்திய தீவுகள் வீரர் சுனில் நரைன் 27 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 
இதனால் மேற்குஇந்திய தீவுகள் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்குஇந்திய தீவுகள் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகள் சுனில் நரைனுக்கு வழங்கப்பட்டன.
 
இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆன்டிகுவாவில் வரும் 25-ம் தேதி துவங்குகிறது.