Published:Updated:

மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அணி வெற்றி!

மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அணி வெற்றி!
மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அணி வெற்றி!

மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அணி வெற்றி!

மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அணி வெற்றி!

லண்டன்:   லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
 
மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.
 
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இயான் மோர்கன் அதிகபட்சமாக 89 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பிரெட் லீ, மேக் கே, கம்மின்ஸ், டோஹ்ரத்தி, வாட்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பயிற்சி போட்டியில் அசத்தியதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அமைந்தது.
 
பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் 56 ரன்னும், கிளார்க் 61 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை. எனினும் இறுதிவரை போராடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆண்டர்சன், பின், பிராட், பிரெஸ்னன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 89 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை (ஜூலை 1) ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு