Published:Updated:

’நீ தானம்மா என் உலகம்’ .. நெகிழ்ந்த சச்சின்!

’நீ தானம்மா என் உலகம்’ .. நெகிழ்ந்த சச்சின்!
’நீ தானம்மா என் உலகம்’ .. நெகிழ்ந்த சச்சின்!

உலக அன்னையர் தினத்தையொட்டி நெட்டிசன்ஸ் மிகவும் ஆக்டிவ்வாக தன் அம்மாவோடு எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு புறம் இன்று மட்டும் அம்மாவுடன் செல்ஃபி எடுத்து பகிர்ந்து வாழ்த்து சொல்வதைவிட தினம் தினம் தாயை போற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த விவாதங்களுக்கு இடையே இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தன் அன்னையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தைப் பகிர்ந்து சிறிது நேரத்தில் புகைப்படம் வைரலாகிவிட்டது. 

’நீ தானம்மா என் உலகம்’ .. நெகிழ்ந்த சச்சின்!


 

அன்னை உடனான புகைப்படத்தை பகிர்ந்த சச்சின், ‘இந்த உலகத்தை பொறுத்தவரை நான் உன் மகன். என்னைப் பொறுத்தவரை நீ தான் என் உலகம்’, என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.