Published:Updated:

#SRHvMI மும்பை சுமாரான பேட்டிங் : ஹைதராபாத்துக்கு 139 ரன்கள் இலக்கு..!

குருபிரசாத்
#SRHvMI மும்பை சுமாரான பேட்டிங் : ஹைதராபாத்துக்கு 139 ரன்கள் இலக்கு..!
#SRHvMI மும்பை சுமாரான பேட்டிங் : ஹைதராபாத்துக்கு 139 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் 10-வது சீசனில், இன்று நடக்கும் போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதிவருகின்றன. டாஸ்வென்ற மும்பை அணி, முதலில் பேட் செய்தது. அந்த அணியில் ரோஹித் சர்மாவைத் தவிர, மற்ற பேட்ஸ்மென்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். நிலைத்துநின்று ஆடிய ரோஹித் சர்மா, 67 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


 

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 138 ரன்கள் எடுத்தது. கவுல் மூன்று விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. 


11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, 9-ல் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி, 6-ல் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.