Election bannerElection banner
Published:Updated:

21 ஆண்டுகளுக்குப் பிறகு... ஃபிஃபா தர வரிசையில் டாப் 100ல் என்ட்ரி கொடுத்த இந்தியா!

ஐபிஎல் போட்டிகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் நம் கால்பந்து அணி சைலன்டாக ஒரு சாதனையைச் செய்துள்ளது. ஃபிஃபா (FIFA) வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

21 ஆண்டுகளுக்குப் பிறகு... ஃபிஃபா தர வரிசையில் டாப் 100ல் என்ட்ரி கொடுத்த இந்தியா!

1996-ம் ஆண்டு 94-வது இடத்தை இந்திய அணி பிடித்திருந்தது. தற்போது வரை ஃபிஃபா தர வரிசையில், இந்தியாவின் சிறந்த நிலை அதுதான். கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த பட்டியலில், இந்திய அணி 101-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது. 

64 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் மண்ணிலேயே, அந்த அணியை வீழ்த்தியது, கம்போடியா அணியைச் சாய்த்தது ஆகியவற்றின்மூலம், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. முக்கியமாக, கடந்த 21 ஆண்டுகளுக்குப் பிறகு, தர வரிசையில் முதல் 100 அணிகளுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், வரும் ஜுன்  மாதம் 7-ம் தேதி லெபனானை எதிர்கொள்கிறது. ஃபிஃபா தர வரிசைப் பட்டியலில், பிரேசில் முதல் இடத்தில் நீடிக்கிறது. அர்ஜென்டினா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி மூன்றாவது இடத்திலும், சிலி நான்காவது இடத்திலும் உள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு