Election bannerElection banner
Published:Updated:

#DDvGL ரிஷப் பன்ட் அதிரடியில் வீழ்ந்தது குஜராத்!

#DDvGL ரிஷப் பன்ட் அதிரடியில் வீழ்ந்தது குஜராத்!
#DDvGL ரிஷப் பன்ட் அதிரடியில் வீழ்ந்தது குஜராத்!

#DDvGL ரிஷப் பன்ட் அதிரடியில் வீழ்ந்தது குஜராத்!

#DDvGL ரிஷப் பன்ட் அதிரடியில் வீழ்ந்தது குஜராத்!

ஐபிஎல் 10-வது தொடரின் 42-வது போட்டியில், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும், கருண் நாயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸை வென்ற டெல்லி அணி, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதற்கேற்ப, குஜராத் அணியின் தொடக்க வீரர்களான டுவெய்ன் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரை, முறையே 9 மற்றும் 1 ரன்களுக்கு விரைவில் அவுட்டாக்கியது டெல்லி அணி.

இதனால், குஜராத் அணியின் ரன் ரேட் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தினேஷ் கார்த்திக் மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இவர்கள், டெல்லி அணியின் பௌலர்கள் வீசிய பந்துகளை, மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்கவிட்டனர். ரெய்னா 43 பந்துகளில் 77 ரன்களும், தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர்களில், ஆரோன் ஃபின்ச் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆட, குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் பாட் கம்மின்ஸ் மற்றும் ரபாடா ஆகியோர், தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

#DDvGL ரிஷப் பன்ட் அதிரடியில் வீழ்ந்தது குஜராத்!

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய டெல்லி அணி, முதல் விக்கெட்டை (கருண் நாயர்) விரைவாக இழந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பன்ட், பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் விளாசித் தள்ளினர். தான் உட்பட எத்தனை பௌலர்களை மாற்றி பந்து வீசினாலும், விக்கெட் கிடைக்காமல் திண்டாடினார் சுரேஷ் ரெய்னா. 10.3 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடி, 143 ரன்களைக் குவித்தது.

சாம்சன் 31 பந்துகளில் 61 ரன்களும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பன்ட் 43 பந்துகளில் 97 ரன்களும் எடுத்த நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால், ஆட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதிகட்டத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கோரே ஆண்டர்சன் தலா 2 சிக்ஸர்களை விளாச, 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது டெல்லி அணி. மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பன்ட்டிற்கு, கிரிக்கெட் உலகின் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு