Election bannerElection banner
Published:Updated:

#IPL10 - குஜராத் சரவெடி... டெல்லிக்கு 209 ரன்கள் இலக்கு!

#IPL10 - குஜராத் சரவெடி... டெல்லிக்கு 209 ரன்கள் இலக்கு!
#IPL10 - குஜராத் சரவெடி... டெல்லிக்கு 209 ரன்கள் இலக்கு!

#IPL10 - குஜராத் சரவெடி... டெல்லிக்கு 209 ரன்கள் இலக்கு!

#IPL10 - குஜராத் சரவெடி... டெல்லிக்கு 209 ரன்கள் இலக்கு!

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது ஐபிஎல் 10-வது சீசன். புள்ளிகள் பட்டியலில் டாப் நான்கு இடங்களில் வருவதற்கு அனைத்து அணிகளும் முழு பலத்தையும் பிரயோகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஐபிஎல் 10-வது தொடரின் 42-வது போட்டியில் ரய்னா தலைமையிலான குஜராத் அணியும், கருண் நாயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

டெல்லியில் நடக்கும் இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற டெல்லி அணி, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை அதிக ஸ்கோர் எடுக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆரம்பித்தது குஜராத் அணி. ஆனால், தொடக்க வீரர்களான ட்வெய்ன் ஸ்மித் மற்றும் மெக்கலம் முறையே 9 மற்றும் 1 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறவே, ரன் ஸ்கோரிங் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன தினேஷ் கார்த்திக் மற்றும் சுரேஷ் ரய்னா ஜோடி சேர்ந்து டெல்லி பௌலர்களின் பந்தை நாலா புறமும் தெறிக்கவிட்டனர். ரய்னா 43 பந்துகளில் 77 ரன்களும், தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 64 ரன்களும் குவித்தனர். இதையடுத்து, அதிரடியைத் தொடர்ந்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியுள்ளது டெல்லி அணி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு